ரஜினி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி, போராட்டம்; ரஜினி ஆதரவைக் கோரும் கட்சிகள்

3 mins read
8641d53b-d586-49eb-841f-005edb071796
படம்: ஊடகம் -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென தனது உடல்நலனைக் காரணம் கூறி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நேற்று முன்தினம் அறிவித்தார். இதைக்கேட்டு அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோரி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின்முன் ரசிகர்கள் சிலர் குந்தியிருப்புப் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் எரிச்சலடைந்த ரசிகர்கள் ரஜினியின் சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர். படம்: ஊடகம்

சென்னை: ரஜினி "இனி கட்­சி­யும் இல்லை, அர­சி­ய­லும் இல்லை," என்ற வலி மிகுந்த முடிவை எடுத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளார்.

இத்தரு­ணத்­தை­ பல கட்­சி­களும் அர­சி­யல் தலை­வர்­களும் தங்­க­ளுக்குச் சாத­க­மாக்­கிக் கொள்ள கள­மி­றங்கி உள்­ள­னர்.

ரஜி­னி­யின் ஆத­ரவு தங்­க­ளுக்கு நிச்­ச­யம் கிடைக்­கும் என்­றும் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அர­சி­யல் கட்சி தொடங்­கப்­போ­வ­தில்லை என அறி வித்­துள்ள ரஜி­னி­காந்த், அதி­முக விற்கு ஆத­ர­வ­ளிப்­பார் என மீன்­வளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார் நம்­பிக்கை தெரி­வித்துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர் களி­டம் அமைச்­சர் கூறி­ய­போது, "ரஜி­னி­காந்த் தனது உடல்­நி­லையை கருத்­தில் கொண்டு இம்­மு­டிவை அறி­வித்­துள்­ளார். எனவே, அதி­முக சார்­பில் எந்­த­வித கருத்­தும் சொல்ல முடி­யாது. அவர் நீண்ட ஆயு­ளோடு வாழ்ந்து, மக்­க­ளுக்­காக தொண்டாற்­ற­வேண்­டும்.

"ரஜி­னி­காந்த் ஒரு­போ­தும் திமுக விற்கு ஆத­ர­வு தரமாட்­டார். எதிர்­கா­லத்­தில் யாருக்­கே­னும் அவர் ஆத­ர­வ­ளிக்க விரும்­பி­னால், அது மக்­க­ளுக்கு நல்­லது செய்­யும் அதி­மு­க­விற்­கா­கத்தான் இருக்­கும். 'சிஸ்­ டம்' சரி­யில்லை எனக் கூறி­யது அதி­மு­கவை அவர் குறை கூறி­ய­தாக அர்த்­த­மா­காது," என்­றார்.

கோவில்­பட்­டி­யில் பேசிய அமைச்­சர் கடம்­பூர் ராஜு கூறுைகயில், "வரும் சட்­ட­மன்­றத் தேர்தலில் அதி­மு­கவை ரஜி­னி­காந்த் ஆதரித்­தால் ஏற்­றுக்­கொள்­வோம்.

"யாருக்கு குரல் கொடுக்­க­லாம் என்­பது அவ­ரது விருப்­பம். இந்த விஷ­யத்­தில் அவரை யாரும் கட்­டா­யப்­ப­டுத்த முடி­யாது. தேர்தலின்­போது ‌அதி­மு­க­வுக்கு ஆத­ர­வாக அவர் குரல் கொடுத்­தால் மிகுந்த மகிழ்ச்­சியே," என்­றார்.

இதை­ய­டுத்து, "ரஜி­னி­யின் நலம் விரும்­பு­ப­வர்­களில் நானும் ஒரு­வன். விரை­வில் ரஜி­னி­யைச் சந்­தித்­துப் பேசு­வேன். நண்­பர் என்­ப­தால் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ரஜி­னி­யின் ஆத­ர­வைக் கேட்­பேன்.

"நான், என் ரஜினி என்று சொல்­லிக் கொண்­டி­ருந்­த­வன். அத­னால் எனக்கு அந்த உரிமை உள்­ளது. கோபப்­ப­ட­மாட்­டார் என நினைக்கி றேன்," என்று மக்­கள் நீதி மய்­யம் கட்­சித் தலை­வர் கமல்­ஹா­சன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கிை­டயே, ரஜி­னி­காந்த்­தின் அர­சி­யல் வருகை சட்­டென்று ஒரு முடி­வுக்கு வந்­துள்­ள­தால், ரஜினி அர­சி­ய­லுக்கு வரு­வார் என்று 100% நம்­பிக்­கொண்­டி­ருந்த அவ­ரது ரசி­கர்­கள் பெரும் ஏமாற்­ற­மும் அதிர்ச்­சி­யும் அடைந்­துள்­ள­னர்.

இத­னால், சில இடங்­களில் இத்­தனை நாள் பட்ட சிர­மம் எல்­லாம் வீணாகிவிட்­டதே என்ற வேத­னை­யு­டன் ரசி­கர்­கள் சிலர் சுவ­ரொட்­டி­களை கிழித்து எறிந்­துள்­ள­னர்.

சோதிடர் ஷெல்வி தொழிலை விடுவாரா என கேள்வி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் கட்சியைத் தொடங்குவார். அப்படித் தொடங்காவிடில் எனது சோதிடர் தொழிலையே விட்டு விடுகிறேன் என பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக விளங்கும் சோதிடர் ஷெல்வி அண்மையில் பேட்டி ஒன்றில் சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்றும் தான் தொடங்கயிருந்த அரசியல் ஆட்டத்தை இத்துடன் முடித்துக் ெகாள்வதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, சோதிடர் ஷெல்வி தனது தொழிலை விட்டுச் செல்வாரா? மாட்டாரா? என சமூக வலைத்தளங்களில் வலைவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அத்துடன், சோதிடத் தொழிலை விட்டு விடுவதாக ஷெல்வி கூறிய காணொளியை யும் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழருவி மணியன்: சாகும் வரை அரசியல் இல்லை

சென்னை: தமிழகத்தில் ரஜினி காந்தின் அரசியல் வருகையால் ஒரு பெரும் மாற்றம் ஏற்படலாம் என்று நினைத்துக் கொண்டி ருந்த தமிழருவி மணியனுக்கு தற்போது பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ரஜினியின் அரசியல் முடிவைத் தொடர்ந்து இறப்பு தன்னைத் தழுவும் வரை தானும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

"மாணிக்கத்திற்கும் கூழாங் கல்லுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றுமில்லை. என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போன்றவை அரசியல் களத்தில் இருந்து விலகி நிற்பதே விவேக மானது. திமுகவில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய்வருகிறேன் என்றார். நான் போகிறேன், வரமாட்டேன்," எனக் கூறியுள்ளார் மணியன்.