தன்மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத் திருந்த தமிழக மக்களுக்கு தன்னால் எந்தவொரு நல்ல காரி யமும் செய்யமுடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினி காந்த் தற்போது உள்ளார் என்று ரஜினிகாந்த்தின் ஆதரவாளர் அர்ஜுனா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அரசியல் வருகைக்கு நடிகர் ரஜினிகாந்த் முழுக்கு போட்டுள்ளதை அடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுனாமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, மருத்துவர்களின் ஆலோசனையின்படியே ரஜினி இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்றும் மக்கள் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், தமிழக மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்ற என்ற மனவருத்தம் அவரை ஆட்டிப்படைத்து வருகிறது.
"ரஜினிகாந்த் மன உளைச்ச லில் இருக்கும் சூழ்நிலையில் அவரோடு தொடர்ந்து இருப்பதுதான் சரி. வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் பாஜகவுக்கு குரல் கொடுப்பாரா? இல்லையா? என்பது தேர்தல் நேரத்தில் அவருடைய மனதில் என்ன உதிக்கிறது என் பதை வைத்து அவர் தான் முடிவு செய்வார்," எனக் கூறினார்.
"நன்கு சிந்தித்து ரஜினிகாந்த் தனது ஆதரவு குறித்த முடிவை எடுப்பார் என்றும் இந்த விஷயத்தில் அவரை யாரும் நிர்பந்திக்க முடியாது எனவும் அர்ஜுனா மூர்த்தி கூறியுள்ளார்.
"என்னுடைய இரு கண்களில் ஒரு கண் மோடி, மற்றொரு கண் ரஜினிகாந்த் இவர்கள் இருவருமே இந்தியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டும் என எண்ணம் கொண்டவர்கள்.
"அந்த நம்பிக்கையால் தான் அவருடன் சேர்ந்து செயல்பட்டேன். இனியும் தொடர்ந்து ரஜினி காந்துடனே பயணிக்க இருக்கிறேன். அவர் ஏற்கனவே மக்கள் சேவை செய்வேன் என தெரிவித்துள்ளார். அவர் மக்கள் சேவை செய்யும் போது அவருடன் சேர்ந்து பணி யாற்றுவது தான் சரி. அதுதான் என் ஆசை," என்று தெரிவித்துள்ளார்.

