தமிழகத்தில் 1.60 கோடி மக்களுக்கு பல்வேறு கட்டங்களாகத் தடுப்பூசி போட திட்டம்; 5 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை

தமி­ழ­கத்­தில் சென்னை, கோவை, நீல­கிரி, திரு­நெல்­வேலி, திரு­வள்­ளூர் ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த 17 மையங்­களில் நேற்று கொரோனா தடுப்­பூசி­ ஒத்­திகை நடத்­தப்­பட்­ட­து.

“இந்த தடுப்­பூசி ஒத்­தி­கை­யில் எவ­ருக்­கும் தடுப்­பூ­சி­கள் போடப்­பட மாட்­டாது. இரண்டு மணி நேரத்­தில் 25 பேருக்கு தடுப்­பூசிகளைப் போடுவதற்கு நேரம் போதுமானதாக இருக்­குமா என்­பது பார்க்கப்படும்.

“அதைத்தொடா்ந்து தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வா்­களை எங்கு அமரவைப்பது, பாது­காப்பு அம்­சங்­களை உறுதி செய்­வது குறித்து ஒத்­திகை பார்க்­கப்­படும்,” என்று சுகாதா­ரத் ­துறை செய­லா­ளர் ராதா­கிருஷ்­ணன் கூறினார்.

இதைத்தொடர்ந்து, சென்­னை­யில் செய்தியாளர்­க­ளி­டம் பேசிய சுகா­தா­ரத் துறை அமைச்சர் விஜ­ய­பாஸ்கர், “தடுப்­பூ­சிக்­கான ஒத்­திகை நேற்று தொடங்­கி­யது. இந்த தடுப்­பூ­சி­களைப் போடும் பணி­க­ளுக்­காகத் தமி­ழ­கம் முழு­வ­தும் 47,200 மையங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

“அத்­து­டன், 21,170 சுகா­தா­ரப் பணியாளா்க­ளுக்கு தடுப்­பூசி போடுவதற்கான பயிற்­சி­யும் அளிக்­கப்­பட்­டுள்­ளது,” என்றார்.

இதற்கிடையே, மாநிலத்தில் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ள தாகவும் இதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், மருத்­து­வ­மனை ஊழி­யர்­களுக்கு முதற்­கட்­ட­மாகவும் காவல்­துறை, ரா­ணு­வம், செய்தித்துறையைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு இரண்டாம் கட்­ட­மாகவும் 50 வய­திற்கு மேற்­பட்­டோர், நீரி­ழிவு, இத­யம், சிறு­நீ­ரகப் பாதிப்­பு­டையவர்­களுக்கு மூன்­றாம் கட்­ட­மாகவும் 1.60 கோடி மக்களுக்கு தடுப்­பூசி போடத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!