சென்னை: திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் (படம்) ஆன்மீக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்து அந்த வாக்கை நிறைவேற்ற முடியாததால் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் ஆன்மீக குருமார்களைச் சந்தித்து ஆன்மீக வாழ்க்கையைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நமோ நாராயணா சுவாமிகள் என்ற ஆன்மீகப் பெரியவர், ரஜினியை அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்து ஸ்படிக மாலையை அணிவித்து, ஆசிர்வதித்ததாக இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஜினி இப்போது மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் ஆன்மீக குருமார்களைச் சந்திக்கவும் ஆன்மீக பயணம் மேற்கொள்ளவும் அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறி உள்ளன.

