கமல்ஹாசன்: பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் தருவோம்

கமல்ஹாசன்: பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் தருவோம்

2 mins read
951f7b87-c9cc-44b8-aaf9-9091ec26ac1b
-

சேலம்: சேலத்­தில் தனது நான்­காம் கட்ட தேர்­தல் பிர­சா­ரத்தை தொடங்­கி­யுள்ள மக்­கள் நீதி மய்­யம் கட்­சித் தலை­வர் கமல்­ஹா­சன், "விவ­சா­யம் முதல் விண்­வெளி வரை பெண்­க­ளுக்கு சம உரிமை, சம ஊதி­யம் வழங்­கு­வதே எங்­கள் லட்­சி­யம். நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால் இதனை கண்­டிப்­பாக நிறை­வேற்­று­வோம்," என்று பேசி­யுள்­ளார்.

கமல்­ஹா­சன் சட்­ட­மன்ற தேர்­த­லை­யொட்டி சீர­மைப்­போம் தமி­ழ­கத்தை என்ற தலைப்­பில் மாநி­லம் முழு­வ­தும் தேர்­தல் பிர­சா­ரம் மேற்­கொண்டு வரு­கி­றார். இன்று செவ்­வாய்க்­கி­ழமை தர்­ம­புரி, கிருஷ்­ண­கிரி மாவட்­டங்­களில் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து பொது­மக்­கள் மத்­தி­யில் பேசு­கி­றார்.

கடந்த மாதம் மது­ரை­யில் தனது முதல்­கட்ட தேர்­தல் பிர­சா­ரத்­தைத் தொடங்­கி­னார். அதன்­பி­றகு அவ­ரது பிர­சா­ரம் நாகப்­பட்­டி­னம், வேதா­ரண்­யத்­தில் தொடர்ந்­தது.

தனது கட்சி ஆட்­சிக்கு வந்­தால் கல்வி, சுகா­தா­ரத் துறை­களை அரசே ஏற்று நடத்­தும் என்­றும் அர­சி­யல்­வா­தி­கள் நேர்­மை­யாக இருந்­தி­ருந்­தால் நான் அர­சிய லுக்கு வந்­தி­ருக்­க­மாட்­டேன் என்­றும் கூறி­னார்.

ஏற்­கெ­னவே இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு மாத ஊதி­யம் அளிக்­கப்­படும் என்று கமல்­ஹா­சன் கூறி­யி­ருந்த நிலை யில், தற்­போது பெண்­க­ளுக்கு சம உரிமை சம ஊதி­யம் வழங்­கு­வதே தங்­க­ளது லட்­சி­யம் என்று பேசி யுள்­ளார்.

"சேலம், அழ­கா­பு­ரம் பகு­தி­யில் கூடி­யுள்ள மக்­கள் கூட்­டத்­தைப் பாா்க்கும்­போது தமி­ழ­கம் மாற்­றத் துக்­குத் தயா­ரா­கி­விட்­டது தெரி கிறது. மக்­கள் நீதி மய்­யம் நோ்மை யான ஆட்­சி­யைத் தரும்," என்றாா்.

சேலம் அழகாபுரம் பகுதியில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய கமல்ஹாசன் திறந்தவெளி காரில் நின்று மக்களுடன் பேசினார். படம்: ஊடகம்