பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பில் மேலும் மூவர் கைது

2 mins read
f53ff354-1741-4521-a736-f9d51aee32ed
அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக்பாபு. படம்: ஊடகம் -

கோவை: தமி­ழக மக்­களைக் கதி­கலங்க வைத்த பொள்­ளாச்சி பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கின் தொடர்­பில், கடந்த இரண்டு ஆண்டு­க­ளுக்­குப் பிறகு அதி­முக நிர்­வாகி உள்­ளிட்ட மேலும் மூவரை சிபிஐ போலி­சார் கைது செய்­த­னர்.

இவர்­கள் மூவ­ரை­யும் ஜன­வரி 20ஆம் தேதி வரை நீதி­மன்­றக் காவ­லில் வைக்க கோவை மாவட்ட மக­ளிர் நீதி­மன்ற நீதி­பதி நந்­தினி தேவி உத்­த­ர­விட்­டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு கோவை மாவட்­டம், பொள்­ளாச்சி யைச் சேர்ந்த கும்­பல் ஒன்று பணம், அதி­கார மிடுக்­கோடு ஊரி­லி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான கல்­லூரி மாண­வி­கள் உள்­ளிட்ட இளம்­பெண் களுக்கு வலை விரித்­தது.

அவர்­க­ளது ஆசை வார்த்­தை­யில் விழுந்த பெண்­களை பண்ணை வீடு­க­ளுக்கு வர­வ­ழைத்து, அங்கு அவர்களை அடைத்துவைத்து பாலி­யல் வன்­கொ­டுமை செய்து அதனை காெணாளி­யா­கப் பதிவு செய்து மிரட்டி வந்­துள்ள சம்­ப­வம் தமி­ழ­கத்தை அதிர வைத்­தது.

பல இடங்­க­ளி­லும் இச்­சம்­ப­வம் தொடர்­பாக போராட்­டங்­கள் வெடித்­ததை அடுத்து, திரு­நா­வுக்கரசு, சதீஷ், வசந்­த­கு­மார், சபரிராஜன், மணி­வண்­ணன் ஆகிய ஐவரும் கைது செய்­யப்­பட்டு சேலம் மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், இவ்­வி­வ­கா­ரத்­தில் அர­சி­யல் பிர­மு­கர்­க­ளுக்­கும் தொடர்பு இருப்­ப­தாக புகார் எழுந்­த­தைத் தொடர்ந்து, இவ்வழக்கு சிபிஐ விசா­ர­ணைக்கு மாற்­றப்­பட்­டது.

இதை­ய­டுத்து, இரண்டு ஆண்­டுக்குப் பிறகு பொள்­ளாச்­சியைச் சேர்ந்த ஹேரன் பால் (29), பாபு என்­கிற பைக்­பாபு (27), அதி­முக பிர­மு­கர் அரு­ளா­னந்­தம் (34) ஆகி யோரை செவ்­வாய்க்கிழமை இரவு சிபிஐ போலி­சார் கைது செய்­த­னர்.

இந்­நி­லை­யில், அதி­மு­க­வின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓபி­எஸ், துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஈபி­எஸ் இரு­வ­ரும் கூட்­டாக இணைந்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "கட்­சி­யின் கொள்கை, குறிக்­கோள்­கள், கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணான வகை­யில் செயல்­பட்­ட­தா­லும் கழ­கத்­தின் கண்­ணி­யத்­துக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் நடந்து கொண்­ட­தா­லும் பொள்­ளாச்சி நகர மாண­வ­ரணிச் செய­லா­ளர் அரு ளானந்­தம் கழ­கத்­தின் அடிப்­படை உறுப்­பி­னர் உள்­ளிட்ட அனைத்து பொறுப்­பு­க­ளி­ல் இருந்­தும் நீக்­கப்­படு­கி­றார்," என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, "தமி­ழ­கத்தை பெண்­க­ளுக்குப் பாது­காப்­பில்­லாத மாநி­ல­மாக அதிமுக அரசு சீர­ழித்­துள்­ள­து. இந்தக் குற்றச்சாட்டின் உச்­சக்­கட்ட வெளிப்­பா­டு­தான் பொள்­ளாச்சி பாலி­யல் கொடூ­ரங்­கள்," என்­று எதிர்க்­கட்­சித் தலை­வர் மு.க.ஸ்டா­லின் கூறியுள்ளார்.

"அரு­ளா­னந்­தம் நக­ரச் செய­லா­ளர் கிருஷ்­ண­கு­மா­ரின் நிழல், துணை சபா­நா­ய­கர் பொள்­ளாச்சி ஜெய­ரா­ம­னால் வளர்க்­கப்­பட்­ட­வர்.

"இந்த வழக்கில் தொடர்­பு­டைய அனை­வ­ரை­யும் கைது செய்து, தண்­டனை வழங்கி, தமிழ்­நாட்­டுப் பெண்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­திட வேண்­டும்," என்றும் சிபிஐ அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.