அதிமுக ஆலமரமாக வளர எம்ஜிஆர் இரட்டை இலையை நட்டு வைத்தார். அவர் போட்ட இலையில் இப்போது இருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடித்துக்கொள்கிறார்கள். இருவரும் சேர்ந்து நாற்காலியின் இரு கைப்பிடியையும் உடைக்கப்போகிறார்கள். தற்போதுள்ள சில தேர்தல் கூட்டணிகள் உடையும். அப்படி உடையும்போது கூட்டணி யாருடன் என நான் சொல்வேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்
தருமபுரி: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "மநீம எம்எல்ஏக்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறி னால் ராஜினாமா செய்துவிடு வார்கள்," என்று கூறினார்.
பாப்பாரப்பட்டியில் பேசிய அவர், "சினிமாக்காரனுக்கு கூடும் கூட்ட மெல்லாம் வாக்காக மாறாது என்று பேசுகிறார்கள். அதை நிராகரித்துக் காட்டுங்கள். நான் இங்கு பார்க்கும் முகங்கள் எல்லாம் நாளை நமதே, நாளை நமதே என்று சொல்கிறது.
"எங்களது வேட்பாளரை நீங்கள் வெற்றிபெறச் செய்த பின்னர், அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாவிட்டால் அவரின் ராஜி னாமா கடிதம் என்னிடம் உள்ளது. அவர்கள் ராஜினாமா செய்வார்கள்," எனவும் வாக்குறுதி அளித்தார்.
தமிழகத்தில் 4,266 ஏரிகள் நிரம்பின
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் 4,266 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. அதேநேரம் 438 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடப்பதாகவும் 698 ஏரிகள் 91 முதல் 99% வரை நிரம்பி வருவதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

