ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் பண்டிகைக்காக மண்பானை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படம்: ஊடகம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, அகரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டத் தொழிலாளர்கள் பானை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த கோடைக்காலத்தில் விற்பனை முற்றிலும் சரிந்து, தொழில் நலிவடைந்து தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் தற்போது பொங்கல் பண்டிகை நேரத்தில் மண்பானை விற்பனை மீண்டும் பொலிவு பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

