பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி போராட்டம்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி போராட்டம்

1 mins read
c768995b-e537-47fe-8147-df0cb8cab9ee
படம்: ஏஎஃப்பி -

நாடு முழுவதும் உள்ள பசுக்களைப் பாதுகாக்கவும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும் கோரி நேற்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பசுக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் பாரதிய கௌ ரக்‌ஷா தளம் என்னும் இந்து தேசியவாத அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தவிர யுகா துளசி என்ற அமைப்பினரும் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஹைதராபாத்தின் எல்பி நகர் வட்டாரத்தில் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அதனால் ஹைத ராபாத்-விஜயவாடா நெடுஞ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உடனடி யாக போலிசார் தலையிட்டு ஆர்ப்பாட்க்காரர்களைக் கைது செய்தனர்.