நாகை மாவட்டம் நாகை தோப்பு அருகே சந்திரா, 40, (கற்பனைப் பெயர்) இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து கையாள், சித்தாள் உள்ளிட்ட கிடைக்கும் கூலி வேலை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வருகிறார் சந்திரா. இரவு நேரங்களில் மகள்களுடன் அருகிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம்.
வியாழக்கிழமை இரவு சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ், 25, ஆனந்த், 26, ஆகியோர் சந்திராவை பின்தொடர்ந்து சென்றனர்.
சிறிது நேரத்தில் சந்திராவின் வாயை துணியால் பொத்தி சரமாரியாக தாக்கி அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். இரவு நேரமானதால் ஆள் நடமாட்டம் இல்லாததைப் பயன்
படுத்திய இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சந்திரா மயங்கி விழுந்தார். அவர்கள் இருவரும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
காலையில் அக்கம்பக்கத்தினர் சந்திராவை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அருண்ராஜும் ஆனந்தும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாகை தோப்பு பகுதி முழுவதும் போலிஸ் குவிக்கப்பட்டது. இருவரையும் தூக்கிலிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் முழக்கமிட்டனர்.

