கமல்ஹாசன் கோவையில் சூறாவளிப் பிரசாரம்

கமல்ஹாசன் கோவையில் சூறாவளிப் பிரசாரம்

1 mins read
7300d595-ce01-4a6d-a99e-97ced0bb04fd
கமல்ஹாசன். கோப்புப் படம் -

சென்னை: மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் தலை­வ­ரும் நடி­க­ரு­மான கமல்­ஹா­சன் இன்று கோவை­யில் தேர்­தல் சுற்­றுப் பய­ணம் செய்யவிருக்­கி­றார்.

'சீர­மைப்­போம் தமி­ழ­கத்தை' என்ற தனது கட்­சி­யின் தனிப்­பட்ட முழக்க வரி­யு­டன் மாவட்­டந்­தோ­றும் அவர் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

அந்த வகை­யில் 5வது கட்­ட­மாக கோவை மண்­ட­லத்­துக்கு உட்­பட்ட பகு­தி­களில் இன்று முதல் 13ஆம் தேதி வரை நான்கு நாட்­கள் கமல்­ஹா­சன் சுற்­றுப்­ப­ய­ணம் செல்­கி­றார். கோவை­யில் 10ஆம் ேததி மாலை 3 மணிக்கு பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பு­டன் அவ­ரது பய­ணம் தொடங்­கு­கிறது. இதை­ய­டுத்து நட்­சத்­திர ஹோட்­ட­லில் உள்ளரங்கு சிறப்பு நிகழ்ச்­சி­யில் அவர் பங்­கேற்­க­வி­ருக்­கி­றார். பின்­னர், சின்­னி­யம்­பா­ளை­யம் பேருந்து நிலை­யம், சவு­ரிப்­பா­ளை­யம், சீர­நா­யக்­கன்­பா­ளை­யம், மாதம்­பட்டி, துடி­ய­லூர், சர­வ­ணம்­பட்டி, அன்­னூர், அவி­நாசி, பெரு­ம­நல்­லூர், குன்­னத்­தூர், கோபிச்­செட்­டிப்­பா­ளை­யம் பேருந்து நிலை­யம், பவானி, கனி ராவுத்­தர்­கு­ளம் பேருந்து நிலை­யம், மொடக்­ குறிச்சி பேருந்து நிலை­யம், தாரா­பு­ரம், உடு­ம­லைப்­பேட்டை காந்தி நகர், பொள்­ளாச்சி திடல், பொள்­ளாச்சி தலைமை அலு­வ­ல­கம் உட்­பட பல்­வேறு இடங்­களில் கமல்­ஹா­சன் பிர­சா­ரம் செய்­ய­வுள்­ளார்.