தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர்: ஜல்லிக்கட்டு வீரர், காளைகளுக்கு தலா ஒரு கார் பரிசு

1 mins read
e9b7f636-eea7-41a2-afb3-9982f9c03bbb
-

மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடு களைக் கண்காணித்து வரும் அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது முகக்கவசம் அணிந்திருக்கும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப் படுவார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு முதல் பரிசாக தலா ஒரு கார் வழங்கப்பட உள்ளது. சிறந்த மாடுபிடி வீரருக்கான பரிசை முதல்வரும் காளைக்கான பரிசைத் துணை முதல்வரும் வழங்குவர். அலங்காநல்லூரில் 655, பாலமேட்டில் 651, அவனியாபுரத்தில் 430 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.