மோடி குறித்து அவதூறு: விமானி பணிநீக்கம்

மோடி குறித்து அவதூறு: விமானி பணிநீக்கம்

1 mins read
43df9cf5-5d63-4d30-b040-9eaf2aeb759b
படம்: ஊடகம் -

பிர­த­மர் மோடி குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் விமர்­சித்­ததை அடுத்து விமானி ஒரு­வர் தம் பணியை இழந்­துள்­ளார்.

அண்மையில் டுவிட்டரில் பிர­த­மர் குறித்து அந்த விமானி அவதூறா­கப் பதி­விட்­டதை ஏற்­கவே இய­லாது என ­த­னி­யார் விமான நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

அனைத்து ஊழி­யர்­களும் நிறு­வ­னத்­தின் வேலை­வாய்ப்பு விதி­கள், ஒழுங்­கு­மு­றை­கள் மற்­றும் சமூக ஊடக நடத்தை உள்­ளிட்ட கொள்கை­க­ளுக்கு இணங்க வேண்டி­யது கட்­டா­ய­மா­கும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள அந்­நி­று­வ­னம், அக்கு­றிப்பிட்ட விமானியின் சேவையை உட­ன­டி­யாக நிறுத்தி உள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

இந்­திய விமா­னப்­ப­டை­யில் 27 ஆண்­டு­கள் பணி­யாற்­றிய அனுபவம் உள்ள அந்த விமானி, தமது செய­லுக்­காக டுவிட்­ட­ரில் மன்­னிப்பு கோரி­யுள்­ளார்.

தனது செயல்­பாட்­டுக்­கும் நிகழ்ந்­துள்ள தவ­ற்றுக்­கும் தாமே பொறுப்­பேற்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அனைத்து பின்­வி­ளை­வு­களையும் தாம் மன­மு­வந்து ஏற்­றுக் கொள்வதாகக் கூறி­யுள்­ளார்.