தமிழகத்தில் முதற்கட்டமாக ஆறு லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை: தமி­ழ­கத்­தில் முதற்­கட்­ட­மாக ஆறு லட்­சம் பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­படும் என தமி­ழக சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் டாக்­டர் ஜெ.ராதா­கிருஷ்ணன் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை முதல்­வர் பழ­னி­சாமி தொடங்கிவைத்­த­தும் முத­லில் அரசு, தனி­யார் மருத்­து­வ­மனை மருத்­து­வர்­கள், தாதி­யர் மற்­றும் மருத்­துவப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் மருத்­து­வம் சாரா பணி­யா­ளர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடப்­படும் எனக் குறிப்­பிட்­டார்.

மூன்று வாரங்­க­ளுக்­குள் இந்த முதற்­கட்ட பணி முடி­வ­டை­யும் என்­றும், மராட்­டிய மாநி­லம் புனே­யில் இருந்து விமா­னம் மூலம் வரும் தடுப்­பூ­சி­க­ளுக்­காக காத்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

தடுப்­பூ­சி­கள் வந்­த­டைந்த உடன், சென்­னை­யில் உள்ள மத்திய அர­சின் கிடங்­கில் அவை பாது­காக்­கப்­படும் என்­றும் பின்­னர் அங்­கி­ருந்து குளிர்­சா­தன வசதி உள்ள வாக­னங்­கள் மூலம் பிற மாவட்­டங்­க­ளுக்கு அனுப்பிவைக்­கப்­படும் என்­றும் ராதா­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

இதற்­காக 51 நட­மா­டும் குளிர்­சா­தன வசதி கொண்ட கிடங்­கு­கள் (வாக்­கிங் கூலர்) பயன்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

"இதற்கு அடுத்த கட்­ட­மாக 2,618 பெரிய மருத்­து­வ­மனை மற்­றும் ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளுக்கு குளிர்­சா­தன வச­தி­யு­டன் தடுப்­பூ­சி­களை எடுத்­துச்­செல்­ல­வும், அங்கு சேமித்து வைக்­க­வும் திட்­டம் தயார்­நி­லை­யில் உள்­ளது. தடுப்­பூசி போடு­வ­தற்குத் தேவை­யான சிறிய அள­வி­லான குளிர்­சா­தனப் பெட்­டி­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

"தடுப்­பூசி போடு­வ­தற்­காக 28 லட்­சம் சிரிஞ்­சு­கள் மற்­றும் ஊசி­கள் வரப்­பெற்று, அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் அனுப்பிவைக்­கப்­பட்­டுள்­ளன," என்று டாக்டர் ராதா­கி­ருஷ்­ணன் மேலும் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!