கோவை: இல்லத்தரசி களின் நலன் கருதி மக்கள் நீதி மய்யம் வகுத்துள்ள திட்டங்களை ஆசிய கண்டத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியும் முன்வைத்ததில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தாய்மார்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று தாம் அறிவித்தபோது கொக்கரித்தவர்கள் இன்று ஓய்ந்து போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக கோவையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தை உச்ச நீதிமன்றமே பரிந்துரைத்துள்ளது என்றும் சினிமாக்காரன் என்பதால் தமக்கு கூட்டம் கூடவில்லை என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் அரிய பல திட்டங்களை விவசாயிகளுக்காக, இளைஞர்களுக்காக, இல்லத்தரசிகளுக்காக தீட்டி வைத்திருக்கிறோம்.
"எங்களின் திட்டங் களை செயல்படுத்த நீங்கள் ஆணையிட்டால் நாங்கள் நிறைவேற்றுவோம். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கி றார்கள் என்பதே உண்மை," என்றார் கமல்ஹாசன்.

