அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; வியப்புடன் ராகுல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; வியப்புடன் ராகுல்

1 mins read
e0f84adc-de24-452e-b0ff-63487abceda6
-

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று ஆரவாரமாக நடை பெற்றது. இது, இவ்வாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி யாகும். சீறிப்பாயும் 520 காளை களை அடக்கும் முயற்சியில் 430 வீரர்கள் ஈடுபட்டனர். அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியு மான ராகுல் காந்தி(மேடையில் நின்று கொண்டிருக்கிறார்) வியப்புடன் பார்வையிட்டார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி ஆகியோரும் உடன் இருந்தனர். திருநாவுக்கரசு, விஜய் ஆகிய இரு இளைஞர்கள் தலா 26 காளை களை அடக்கி முதல் பரிசை வென்றனர். பின்னர் பேசிய ராகுல், ஜல்லிக்கட்டு பற்றி புரிந்துகொண்டதாகக்

கூறினார்.