சென்னைக்கு வந்த 'கோவாக்சின்' தடுப்பூசி

சென்னைக்கு வந்த 'கோவாக்சின்' தடுப்பூசி

1 mins read

சென்னை: இந்­தி­யா­ முழுவதும் இம்­மா­தம் 16ஆம் தேதி கொரோனா தடுப்­பூசி போடும் பணி துவங்க உள்ள நிலை­யில் கோவாக்­சின் தடுப்­பூ­சி­கள் சென்னை வந்து சேர்ந்­துள்ளன.

முன்­ன­தாக தமி­ழ­கத்­திற்கு ஐந்து லட்­சத்து 36 ஆயி­ரத்து 500 'தடவை' போடக்­கூ­டிய கோவி­ஷீல்ட் தடுப்­பூசி மருந்­து­கள் செவ்­வாய்க் கிழமை சென்னை வந்­தன.

அங்­கி­ருந்து தமி­ழ­கத்­தில் உள்ள சுகா­தார மாவட்­டங்­க­ளுக்கு அனுப்பப்பட்டு வரு­கின்­றன. இந்த நிலை­யில் முழுக்க முழுக்க இந்­தி­யா­வில் உரு­வாக்­கப்­பட்ட கோவாக்­சின் தடுப்­பூசி மருந்­தின் 20,000 முறை போடக்­கூ­டிய மருந்­து­கள் சென்னை வந்­தன. அவை, சென்னை டிஎம்­எஸ் வளா­கத்­தில் உள்ள மாநில சேமிப்புக் கிடங்­கில் வைக்­கப்­பட்டு உள்­ளன.

அவற்றை சுகா­தா­ரத் துறை செய­லர் ராதா­கி­ருஷ்­ணன், பொது சுகா­தார இயக்­குநர் செல்­வ­வி­நா­ய­கம் உள்­ளிட்­டோர் ஆய்வு செய்­த­னர். இது­வரை கோவி­ஷீல்ட், கோவாக்­சின் என 5,56,500 முறை போடக்­கூ­டிய மருந்­து­கள் சென்னை வந்து சேர்ந்­துள்­ளன. தடுப்­பூ­சி­கள் தயா­ரா­ன­தும் 16ஆம் தேதி போடும் பணி தொடங்­கப்படும். இந்தியாவில் 'கோவி­ஷீல்ட்', 'கோவாக்­சின்' ஆகிய இரண்டு தடுப்­பூ­சி­களுக்கு மத்­திய அரசு அனு­மதி அளித்து உள்­ளது.