தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார் முதல்வர் பழனிசாமி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார் முதல்வர் பழனிசாமி

1 mins read
66a761e3-210d-4016-9079-8d6448577b18
புனித தோமையார் மலை ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்ற காவல்துறை குடும்பத்தினரின் தைப்பொங்கல் திருநாள் கொண் டாட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி. படம்: தமிழக அரசு/டுவிட்டர் -

சென்னை: புனித தோமை­யார் மலை, ஆயு­தப் படை வளா­கத்­தில் நேற்று காவ­லர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரு­டன் நடை­பெற்ற தைப்­பொங்­கல் கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்­றுப் பேசிய தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, தை பிறந்­துள்­ள­தால் நமக்­கெல்­லாம் வழி­யும் பிறக்­கும் என்று கூறி­யுள்­ளார்.

"சாதி, மத வேறு­பா­டு­களைக் கடந்து அனைத்து தமி­ழர்­க­ளா­லும் சிறப்­பா­கக் கொண்­டா­டப்­படும் இந்­தத் தமி­ழர் திரு­நா­ளாம் பொங்­கல் திரு­நா­ளில் உங்­க­ளைச் சந்­திப்­ப­தில் பெரு­ம­கிழ்ச்சி அடை­கிறேன். இந்த இனிய தரு­ணத்­தில் எனது ஆங்­கி­லப் புத்­தாண்டு மற்­றும் பொங்­கல் நல்­வாழ்த்­துக்­ களைக் கூறு­வ­தில் நான் மட்­டற்ற மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்," என்று முதல்­வர் குறிப்­பிட்­டார்.

பின்­னர் காவல்­து­றைக்கு செய்­யப்­பட்­டுள்ள வச­தி­க­ளை­யும் அத்­து­றை­யி­ன­ரின் பங்­க­ளிப்­பை­யும் சுட்­டிக்­காட்டி அவர் பாராட்­டி­னார்.

"தை பிறந்­தால் வழி பிறக்­கும் என்று சொல்­வார்­கள். நமக்­கெல்­லாம் அந்­தத் தை பிறந்­தி­ருக்­கின்­றது, நமக்­கெல்­லாம் வழி பிறக்­கும் என்ற இனிப்­பான செய்­தியை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்," என்றார் முதல்வர் பழனிசாமி.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் "தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறு வோமாக, இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்," என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.