துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தியவர் பிடிபட்டார்

துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தியவர் பிடிபட்டார்

1 mins read
deb86565-88b0-4b9a-8ddc-0fc1f1910746
படம்: சாவ் பாவ் -

துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் வெள்ளிக் கிழமை அதிகாலை சென்னை வந்தது.

அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை யினர் சோதனையிட்டபோது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர், 21, என்ற பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

சோதனையில், அவருடைய உள் ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 722 கிராம் தங்கத்தை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.36.52 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பயணி யைக் கைது செய்து சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்