‘ரஜினி மக்கள் மன்றத்தினர் விரும்பும் கட்சியில் சேரலாம்’

ரஜினி மக்­கள் மன்­றத்­தில் இருப்­ப­வர்­கள் தாங்­கள் விரும்­பும் எந்­தக் கட்­சி­யி­லும் இணை­ய­லாம் என அறி­விப்பு வெளியாகியுள்ளது.

கிட்­டத்­தட்ட 25 ஆண்­டு­கா­ல­மாக நடி­கர் ரஜி­னி­காந்த் அர­சி­ய­லுக்கு வரு­வார் என அவ­ரின் ரசி­கர்­கள் பொறு­மை­யா­கக் காத்­தி­ருந்­த­னர். ஆயி­னும், 2017 இறுதி­யில்­தான் தாம் அர­சி­ய­லுக்கு வரப்­போ­வது உறுதி என்­று ரஜினி அறி­வித்­தார். இதை அடுத்து, அவ­ரு­டைய ரசி­கர்­கள் உற்­சா­க­ம் அடைந்­த­னர்.

ரசி­கர் மன்­றங்­கள் ‘ரஜினி மக்­கள் மன்­றங்­க­ளாக’ மாற்­றப்­பட்டு, 2021 சட்­ட­மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்­ளும் வகை­யில் களப்­ப­ணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டன.

2021 ஜன­வரியில் அர­சி­யல் கட்சி தொடங்­கு­வேன் என்­றும் 2020 டிசம்­பர் 31ஆம் தேதி அது­கு­றித்த அறி­விப்பு வெளி­யா­கும் என்­றும் ரஜினி தெரி­வித்­த­தால் தமி­ழக அர­சி­யல் கள­ம் சூடு­பிடித்தது.

இந்­நி­லை­யில், கடந்த மாதம் படப்­பி­டிப்­பிற்­காக ஹைத­ரா­பாத் சென்­றி­ருந்­த­போது ரஜி­னிக்கு உடல்­நிலை சரி­யில்­லா­மல் போகவே, சில நாள்­கள் மருத்­துவ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற்­றார். அதைத் தொடர்ந்து, மருத்­து­வர்­க­ளின் ஆலோ­சனை, குடும்­பத்­தா­ரின் வேண்­டு­கோ­ளுக்­குச் செவி­சாய்த்த ரஜினி, தாம் அர­சி­ய­லுக்கு வரப்­போ­வ­தில்லை என்று அறிவித்துவிட்டார்.

இத­னால் ஏமாற்­ற­ம­டைந்த ரசி­கர்­கள், ரஜினி தமது முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்­யக் கோரி போராட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர். ஆனால், “எனது இறுதி முடிவை அறி­வித்­து­விட்­டேன். போராட்­டங்­களில் ஈடு­பட்டு என்னை வேத­னைக்கு உள்­ளாக்க வேண்­டாம்,” என்று அவர் கூறி­விட்­டார்.

இதைத் தொடர்ந்து, அர­சி­ய­லுக்கு வர­வில்லை என்­றா­லும் ரஜினியின் ஆத­ரவு தங்­க­ளுக்­குத்­தான் என ஒரு சில கட்­சி­கள் முழங்கி வரு­கின்­றன.

ஆனால், ரஜினி மக்­கள் மன்ற நிர்­வா­கி­களில் சிலர் வேறு கட்­சி­களை நோக்கி படை­யெ­டுக்­கத் தொடங்­கி­விட்­ட­னர். அவ்­வ­கை­யில், ரஜினி மக்­கள் மன்­ற மாவட்டச் செயலாளர்கள் மூவர் திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் முன்­னி­லை­யில் அண்மையில் அக்­கட்­சி­யில் இணைந்­த­னர்.

இந்த நிலை­யில், “ரஜினி மக்­கள் மன்­றத்­தில் உள்­ள­வர்­கள் ஏதே­னும் அர­சி­யல் கட்­சி­யில் இணைந்து செயல்­பட விரும்­பி­னால், ரஜினி மக்­கள் மன்­றத்­தி­ல் இ­ருந்து விலகி, அவர்­கள் விருப்­பம்­போல் எந்த அர­சி­யல் கட்­சி­யில் வேண்­டு­மா­னா­லும் இணைந்­து­கொள்­ள­லாம். அவர்­கள் வேறு கட்­சி­யில் இணைந்­தா­லும், எப்­போ­தும் நம் அன்­புத் தலை­வ­ரின் ரசி­கர்­கள்­தான் என்­பதை ரஜினி மக்­கள் மன்ற உறுப்­பி­னர்­கள் யாரும் மறந்­து­வி­டக்­கூ­டாது,” என்று ரஜினி மக்­கள் மன்ற நிர்­வாகி வி.எம்.சுதா­கர் நேற்று அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!