‘கியூஆர்’ குறியீடு மூலம் மொய்ப் பணம்

திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தி உறவினர்கள் மணமக்களுக்கு தங்களது கைபேசி வழியாகவே மொய்ப் பணத்தை எழுதினர். படம்: ஊடகம்

மதுரை: மது­ரை­யில் நடந்த திரு­ம­ணம் ஒன்­றில் புது­மை­யான முறை­யில்­மொய்ப் பணத்தை மண­மக்­கள் அன்­ப­ளிப்­பாக பெற்­றுள்­ள­னர். ‘கியூ­ஆர்’ குறி­யீட்டை ‘ஸ்கேன்’ செய்­தால் தம்­ப­தி­க­ளின் வங்­கிக் கணக்­கில் மொய்ப் பணம் ஏறி­வி­டும் விதத்­தில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

பெங்­க­ளூ­ரூ­வில் பொறி­யா­ளர்க ளாகப் பணி­பு­ரி­யும் மது­ரை­யைச் சேர்ந்த மண­ம­கள் சிவ­சங்­க­ரி­யும் மண­ம­கன் சர­வ­ண­னும் நேற்று முன் தினம் திரு­ம­ணம் செய்­த­னர்.

அவர்­கள் கைபேசி செய­லி­யில் தங்­க­ளது வங்­கிக் கணக்கை இணைத்து ‘கியூ­ஆர்’ குறி­யீடு உரு­வாக்­கி­னர். அதனை அச்­ச­டித்து மொய் எழுத வரும் பகு­தி­யி­லும் வைத்­துக்­கொண்­ட­னர். தங்­க­ளது திரு­மண அழைப்­பி­த­ழி­லும் அந்த ‘கியூஆர்’ குறி­யீடு அச்­சி­டப்­பட்டு இருந்­தது. இதைக்­கண்டு ஆச்­ச­ரிய மடைந்த உற­வி­னர்­கள் ‘கூகுள் பே, போன் பே’ ைகபேசி செயலி வழி மொய்ப் பணம் எழு­தி­னர்.

“கொரோனா காலம் என்­ப­தால் பெரும்­பா­லான உற­வி­னர்­கள் திரு மணத்­துக்கு வரு­வ­தைத் தவிர்த்­த­னர். இருந்­தா­லும் மொய் எழுத விரும்­பிய அவர்­கள் இம்முறையில் பணம் வைக்க அதிக வர­வேற்பு தந்தனர்,” என்று திரு­ம­ண­வீட்­டார் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!