ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு போலி தங்கக் காசு

2 mins read
375f40db-e504-4feb-99ce-883c1a8e6929
படம்: ஊடகம் -

உல­கப் புகழ்­பெற்ற அலங்­கா­நல்­லூர் ஜல்­லிக்­கட்டு போட்­டி­யில் காளை­களை அடக்­கும் வீரர்­க­ளுக்­கும் வீரர் ­க­ளைத் தூக்கி வீசி பந்­தா­டிய காளை­க­ளுக்கும் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

ஜன­வரி 16ஆம் தேதி நடந்­த இப்போட்டியில் எட்டு காளை­களை அடக்கி நான்கு தங்­கக் காசு­களைப் (படம்) பரி­சா­கப் பெற்ற வீரர் ஒரு­வ­ருக்கு போலித் தங்­கக்­கா­சு­கள் பரி­சாக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்டு எழுந்துள்ளது.

இது­போல மேலும் பல வீரர்­களும் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தங்­கக்­கா­சு­களைப் பரி­சோ­தனை செய்­த­தில் இந்த விவ­ரம் தெரிந்து, வேத­னை­ய­டைந்­துள்­ள­னர்.

மதுரை மாவட்­டம், குற­வன் குளத்­தைச் சேர்ந்த விஜ­யன், 24, எட்டு மாடு­க­ளைப் பிடித்து, நான்கு காசுகளைப் பரி­சா­க வென்றார்.

அந்த தங்கக்காசுகளை நேற்று முன்தினம் அவர் அரு­கில் உள்ள ஒரு நகைக்­க­டை­யில் கொடுத்து பரி­சோ­தனை செய்­த­தில் அவை தர­மற்­றவை என்­ப­தும் தங்­கத்­தின் அளவு மிகமிகக் குறை­வா­க­வும் செம்­பும் இரும்­பும் அதி­க­ள­வில் இருந்­த­தும் தெரியவந்­தது.

இது ­கு­றித்து மாடு­பிடி வீரர் விஜ­ய­னின் தந்தை கணே­ச­மூர்த்தி கூறு­கை­யில், ''எனது மகன் நான்கு காளை­களைச் சிறப்­பாக அடக்கி யதற்­காக ஒரு கிராம் எடை­யுள்ள நான்கு தங்­கக்­கா­சு­களைப் பரி­சாகப் பெற்­றார். போட்­டி­யின்­போது காயம் அடைந்­த­தால் களத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னார்.

"இந்த தங்கக் காசுகளை நகைக்­க­டைக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்­தேன். அப்­போது அவற்றில் மொத்­த­மாக சேர்த்து ஒரு கிராம் அள­வுக்­குக் கூட தங்­கம் இல்லை. செம்­பும் இரும்­பும்­தான் மிக அதி­க­ள­வில் கலந்­தி­ருப்­ப­தாக நகைக்­க­டைக்­கா­ரர் தெரி­வித்­தார்," என்றார்.

மாடு­பிடி வீரர் விஜ­ய­னின் தந்தை கணே­ச­மூர்த்தி

முதல்வர் கையால் வழங்கிய தங்கக் காசுகள் போலி என்றதும் அதிர்ச்சியாக இருந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் காசுக்காகவோ, பணத்திற்காகவோ விளையாடாமல் வீரத்தை நிலை நிலைநாட்டவே உயிரைப் பணயம் வைத்து களமிறங்குகின்றனர். பாரம்பரியமுள்ள இந்த விளையாட்டில் வீரர்களுக்கு இதுபோன்ற பரிசுப்பொருட்களை போலியாக வழங்கியது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.