கல்வி வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமிடும் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள 10, 12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து, மாநிலம் முழு வதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு நடத்தினர். அப்போது, கல்வி வளாகங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்தன.
ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் கொரோனா கிருமித்தொற்றின் பாதிப்புக்கு ஆளாகினர்.
இந்த நிலைமை தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவுரைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், "அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.
"ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், உடல் ெவப்பநிலையைப் பரிசோதிக்கவேண்டும்.
"அதே சமயம், பள்ளி வளாகங்களில் மாணவர்கள் எச்சில் துப்பக் கூடாது, உணவுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளக் கூடாது.
"மாணவர்களைப் பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவர்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும்," எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அனைத்து வகுப்பறைகளிலும் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வைட்டமின், துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும்.
"உணவு உண்ணும் நேரத்தில் முகக்கவசத்தை அப்புறப்படுத்தி, மீண்டும் அணிவதை ஆசிரியர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்," என்றார்.
திருப்பூர்: தமிழகத்தில் மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு முதற் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஆனாலும், இந்த ஊசியால் உயிருக்கு ஊறு விளையுமோ என்ற பயத்தில் பலரும் ஊசியைப் போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், "கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட யாருக்கும் இதுவரை பக்கவிளைவு கள் ஏற்படவில்லை. எனவே, பதிவு செய்தவர்கள் வாய்ப்பை நழுவ விடாமல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்,'' என்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி கூறினார்.
இதேபோல், சென்னை நுங்கம் பாக்கம், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றும் குடல் சார்ந்த செரிமானக் கோளாறு பிரச்சிைனக் கான தலைமை மருத்துவர் கே.ஆர்.பழனிசாமியும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், "தடுப்பூசியை நானும் போட்டுக்கொண்டேன். வலியில்லை. பெரிய அளவில் பக்க விளைவுகள் இருக்காது. சிலருக்கு லேசான தலைவலி, காய்ச்சல் வரலாம். இது பொதுவானதுதான். இதற்காக தடுப்பூசியை தவிர்ப்பது நல்லதல்ல. பயம் தேவையில்லை," என்றார்.

