'தடுப்பூசி போட்டவர்களுக்குப் பக்கவிளைவு ஏற்படவில்லை'

'தடுப்பூசி போட்டவர்களுக்குப் பக்கவிளைவு ஏற்படவில்லை'

1 mins read
ad9c6286-b6a8-4cd8-9e4e-5b244c4336f6
படம்: ராய்ட்டர்ஸ் -

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் எவ­ருக்­கும் எந்தப் பக்­க வி­ளை­வு­ம் ஏற்­ப­ட­வில்லை என்று மாநில சுகா­தா­ரத்­து­றைச் செய­லர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­து இருக்கிறார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் நேற்று ஆய்வு மேற்­கொண்ட திரு ராதா­கி­ருஷ்­ணன், "நாளுக்கு நாள் கொரோனா தடுப்­பூ­சிக்கு வர­வேற்பு கூடி வரு­கிறது. நேற்று (நேற்று முன்­தி­னம்) ஒரே நாளில் பத்­தா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டனர். பொங்­கல் விடு­முறை என்­பதால் முத­லிரு நாள்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்கை குறை­வாக இருந்­தது," என்­றார்.

தமிழ்­நாட்­டிற்­குக் கூடு­த­லாக 508,500 கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­கள் இன்று வர­வி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளைத் தொடர்ந்து அடுத்த பிரிவு முன்­க­ளப் பணி­யா­ளர்­களைக் கணக்­கெ­டுக்­கும் பணி இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் சொன்­னார்.