‘சசிப்பெயர்ச்சி’ பதற்றம்: அரசியல் சதுரங்கத்தில் அந்த ஏழு நாட்கள்

இன்று தொடங்கி இன்­னும் ஏழு நாள்­க­ளுக்கு தமி­ழக அர­சி­ய­லில் திக் திக் பதற்­றம் தொட­ரும் என அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கணித்­துள்­ள­னர். அர­சி­யல் சது­ரங்­கத்­தில் இப்­போது சசி­க­லா­வின் முறை. அவ­ரது காய் நகர்த்­த­லைப் பொறுத்தே ஆட்­டத்­தின் போக்கு மாறும் என்­னும் நிலை­யில் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு பரப்­பன அக்­ர­ஹாரா சிறை­யி­லி­ருந்து சசி­கலா, 69, விடு­தலை ஆகி­றார் என அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது. சசி­க­லா­வின் அர­சி­யல் ஆட்­டம் ஆரம்­ப­மா­குமா அல்­லது அமை­தி­யா­கி­வி­டுமா என்­பது இன்­னும் ஏழு நாள்­களில் தெரிந்­து­வி­டும். அவர் விடு­தலை ஆகி­றார் என நேற்­றுக் காலை அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­வ­தற்கு முன்­ன­தாக தமி­ழக அரசு சார்­பில் ஓர் அறி­விப்பு வெளி­யா­னது.

ஜெய­ல­லிதா நினை­வு­மண்­ட­பத்தை அதே 27ஆம் தேதி முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி திறந்­து­வைப்­பார் என்­ப­து­தான் அந்த அறி­விப்பு. சசி­கலா சிறைக்­குச் செல்­லு­முன் ஜெய­ல­லிதா நினை­வி­டத்­திற்­குச் சென்­றார். அதே­போல விடு­தலை ஆன பின்­ன­ரும் அவர் அங்கு செல்­வார் என கூறப்­பட்­டது. அவ­ரது வரு­கை­யைத் தடுப்­ப­தற்­காக ஜன­வரி 27ஆம் தேதியை அதி­முக தலை­வர்­கள் தேர்ந்­தெ­டுத்­தார்­களா என்று உறு­தி­யா­கத் தெரி­ய­வில்லை.

சென்னை மெரினா கடற்­க­ரை­யில் ஜெய­ல­லிதா நினை­வு­மண்­ட­பம் மற்­றும் அருங்­காட்­சி­ய­கத்­திற்­கான அடிக்­கல்லை 2018 மே 8ஆம் தேதி முதல்­வர் பழ­னி­சாமி நாட்­டி­னார். 50 கோடியே 80 லட்சம் ரூபாய் செல­வில் ஃபீனிக்ஸ் பறவை போன்ற வித்­தி­யா­ச­மான தோற்­றத்­தில் இத்­தாலி மார்­பிள், பளிங்­குக்­கற்­கள் போன்­ற­வற்­றால் மண்­ட­பம் எழுப்­பப்­பட்டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!