காலத்தால் அழியாத ஐம்பொன் சிலைகளை வடித்த சிற்பிகள்

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் ரூ.60 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன இரு குதிரை, வயிரவர் சிலைகள் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே முத்தூரில் உள்ள குப்பயணசுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்டன. சுவாமிமலை தேவசேனாபதி சிற்பக்கூட சிற்பிகள் சிலைகளை வடிவமைத்து வெள்ளகோவிலுக்கு அனுப்பினர். இவை வரும் 25ஆம் தேதி முதல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

“கோயிலில் மண்ணில் செய்யப்பட்ட குதிரைகள்தான் இருந்தன. குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் மண் குதிரை சிதில மடையும் என்பதால், காலத்தால் அழியாத ஐம்பொன்னில் இந்தச் சிலைகளைச் செய்தோம். இந்தக் குதிரை சிலைகள் தலா 9 அடி உயரமும் 3 டன் எடையும் பைரவர் சிலைகள் தலா 3 அடி உயரமும் 150 கிலோ எடையும் கொண்டவை,” என்று சிலையைச் செய்த சிற்பக் கலைஞர்கள் கூறியுள்ளனர்.

ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட குதிரை சிலைகளுடன் தஞ்சாவூர் சுவாமிமலை சிற்பக்கூட சிற்பிகள். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon