ஜெயலலிதாவின் இல்லம் பொதுமக்கள் பார்வைக்குத் திறப்பு

2 mins read
82b5883d-81c3-47f7-8612-caf40631ce45
ஜெய­ல­லி­தா­வின் கனவு இல்­லம். படம்: தமிழக ஊடகம் -

தமி­ழ­கத்­தின் முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் கனவு இல்­லம் பொது­மக்­க­ளின் பார்­வைக்குத் திறக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

சென்னை போயஸ் கார்­ட­னில் உள்ள அவ­ரது 'வேதா இல்­லம்' நினைவு இல்­ல­மாக மாற்­றப்­படும் என 2017 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல்­வர் பழ­னி­சாமி அறி­வித்­தார்.

இதை­யொட்டி இம்­மா­தம் 28ஆம் தேதி பொது­மக்­க­ளுக்கு ஜெய­ல­லி­தா­வின் இல்­லம் திறக்­கப்­ப­ட­உள்­ள­தாக அரசு வட்­டா­ரங்­கள் தெரிவித்தன.

போயஸ் கார்­டன் வீட்டை பலர் உரிமை கொண்­டா­டி­னர். ஆனால் அதனை நினைவு இல்­ல­மாக மாற்று ­வ­தற்கு இழப்­பீ­டாக தமி­ழக அரசு சார்­பில் 68 கோடி ரூபாய் வழங்­கப்­பட்டு ஜெய­ல­லிதா வாழ்ந்த இல்­லம். அர­சு­டைமை ஆக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து சென்னை மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்டு, போயஸ் இல்­லத்­தில் மூன்று முறை ஆய்வு மேற்­கொள்ளப் பட்­டது.

பின்­னர் ஜெய­ல­லிதா இல்­லத்தை பொது­மக்­கள் பார்க்­கும் வகை­யில் என்­னென்ன ஏற்­பா­டு­கள் செய்­ய­லாம் என்­பது குறித்து அர­சுக்கு இக்­குழு பரிந்­து­ரைத்­தது.

இதன்­படி ஜெய­ல­லி­தா­வின் இல்­லத்தை நினை­வி­ட­மாக மாற்­றும் பணியைப் பொதுப்­ப­ணித்­துறை மேற்­கொண்டு முடித்­துள்­ளது.

வீடு முழு­வ­தும் புதிய வர்­ணம் அடிக்­கப்­பட்­டுள்­ளது. வீட்­டில் எந்­தெந்த பொருட்­களை எங்­கெங்கு வைக்­க­லாம் என்­பது குறித்து பட்டி­யலி­டப்­பட்­டுள்­ளது.

அதில் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாறு தொடர்­பான புகைப்­ப­டங்­கள், அவர் பயன்­ப­டுத்­திய பொருட்­கள், படித்த புத்­த­கங்­கள், பரி­சுப் பொருட்­கள் உள்­ளிட்­டவை காட்­சிக்கு வைக்­கப்­ப­டு­கின்­றன. அவ­ரது மார்­ப­ளவு கொண்ட சிலை­களும் இடம்­பெற உள்­ளன.

ஏற்­கெ­னவே சென்னை மெரினா கடற்­க­ரை­யில் பிரம்­மாண்­ட­மாக கட்­டப்­பட்­டு்ள்ள ஜெய­லி­லதா நினை­வி­டம், சிறை­யில் இருந்து சசி­கலா வெளி­யே­றும் ஜன­வரி 27 ஆம் தேதி திறக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு மறு­நாளே ஜெய­ல­லி­தா­வின் நினைவு இல்­ல­மும் திறக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.