தமிழக மீனவர்கள் உயிரிழப்புக்கு இந்தியா கடும் கண்டனம்

தமிழக மீனவர்கள் உயிரிழப்புக்கு இந்தியா கடும் கண்டனம்

2 mins read
95e9d8e7-8107-4966-aec0-143d0c40db83
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து ராமேசுவரத்தில் சக மீனவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். பலியான மீனவர்களின் தாயும் உறவினர்களும் போராட்டம் நடைபெற்ற இடத்தின் முன்பு கதறி அழுதனர். படம்: தமிழக ஊடகம் -

இலங்கை கடற்­படை யினர் நடத்­திய தாக்­கு­த­லில் மீன்­பிடி பட­கோடு நான்கு மீனவர்­கள் கட­லில் மூழ்­க­டிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில், இலங்கை அர­சுக்கு இந்­தியா கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

அத்­து­டன் தமி­ழ­கத் தலை­வர் களும் மாநி­லம் எங்­கும் உள்ள கட­லோர மீன­வர்­களும் இந்த மனித நேய­மற்ற செய­லைக் கண்­டித்­துள்ள னர். ஆங்­காங்கே மீன­வர்­கள் சாலை மறி­யல், உண்­ணா­வி­ர­தப் போராட்­டங் களை­யும் தொடர்ந்து வரு­கின்­ற­னர்.

இந்­தி­யா­வுக்­கான இலங்கை தூதரை அழைத்து இந்த விவ­கா­ரம் குறித்து தனது கடும் எதிர்ப்­பை­யும் அதி­ருப்­தி­யை­யும் இந்­திய வெளியுறவு அமைச்சு பதிவு செய்­துள்ளது.

இது­தொ­டர்­பாக இந்த அமைச்ச கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை யில், "இலங்கை வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சரை அழைத்து தமி ழக மீன­வர்­கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்­கும் அவர்­கள் உயிரி ழந்த சம்­ப­வத்­திற்­கும் வலு­வான எதிர்ப்­பும் கண்­ட­ன­மும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

"அத்­து­டன், டெல்­லி­யில் உள்ள இலங்­கைத் தூத­ரை­யும் அழைத்து மத்­திய அர­சின் தரப்­பில் கடும் கண்­ட­னத்தைப் பதிவு செய்­துள் ளோம்," எனக் கூறி­யுள்­ளது.

இதற்கிடையே, மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழுக்களை அமைத்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிபர் ராஜபக்சே உத்தரவுப்படி ஒரு குழுவும் கடற்தொழில் அமைச்ச கத்தின் கீழ் ஒரு குழுவும் மீனவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தவுள்ளன.

மீனவர்களின் உடல்களைப் உடற்கூர் பரிசோதனை செய்யாமல் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ள தாக இலங்கை கடற்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழக மீன வர்கள் நால்வரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தர விட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒரு வருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.