ஆண்டுக்கு ஒருமுறை சாட்டையடி வாங்கும் மக்கள்

ஆண்டுக்கு ஒருமுறை சாட்டையடி வாங்கும் மக்கள்

1 mins read
801c155e-c944-4c09-a464-d3642408abbb
படம்: ஊடகம் -

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே நடை பெற்ற பாரம்பரிய சாட்டையடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக சாட்டையடி வாங்கினர்.

பொங்கல் திருவிழாவைத் தொடர்ந்து, அச்சல்வாடியில் வசிக்கும் போயர் சமூக மக்கள் அங்குள்ள வாங்காளியம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழாவைக் கொண்டாடுவது வழக்கம்.

இப்படி சாட்டையடி பெறுவதால் பேய் பிசாசுகள் அண்டாமல், நோயின்றி, அனைத்து சிரமங்களும் நீங்கி நலமோடு வாழலாம் என்பது இம்மக்களின் நம்பிக்கையாக உள்ளது. படம்: ஊடகம்