ராகுல் காந்தி: நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன்

ராகுல் காந்தி: நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன்

2 mins read
bddf46b5-1eab-4a0d-88d4-cfd115073849
கோவையில் பிரசாரக் கூட்டங்களில் பேசிய ராகுல் காந்தி, தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பு அல்ல, குடும்பப் பிணைப்பு, நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் உணர்வு மற்றும் கலாசாரத்தின் மதிப்பை உணர்ந்தவன். தமிழ் மக்களை பிரதமரும் பாஜகவும் அவமதிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையம் -

ஈரோடு தேர்­தல் பிர­சா­ரத் தில் பேசிய காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி, "நான் தமி­ழன் அல்ல, ஆனால் தமிழ் கலா­சா­ரத்தை மதிக்­கி­றேன்," என்று கூறி­னார்.

தமி­ழ­கத்­தில் 'வணக்­கம் தமி­ழ­கம்' என்ற பெய­ரில் ராகுல் காந்தி தேர்­தல் பிர­சா­ரம் ெசய்து வரு­கி­றார். இதன்­படி நேற்று ஈரோடு மாவட்­டத்­தில் அவர் தீவிர பிர­சா­ரம் செய்­தார்.

அப்­போது பேசிய ராகுல், "நான் எனது மன­தின் குரலை பேச வர­வில்லை, உங்­க­ளின் குரலை கேட்க வந்­துள்­ளேன். நான் தமி­ழன் அல்ல, ஆனால் தமிழ் கலா­சா­ரத்தை மதிக்­கி­றேன். நாட்­டின் வளர்ச்­சிக்குத் தமி­ழக இளை­ஞர்­க­ளின் பங்கு அளப்­ப­ரி­யது. தமி­ழ­கத்­தில் பல மாற்­றங்­களைக் கொண்டு வர முடி­யும். தமி­ழக மக்­க­ளு­டன் எனக்கு இருப்­பது அர­சி­யல் பிணைப்­பல்ல, குடும்ப பிணைப்பு," என்று தெரி­வித்­தார்.

முன்­ன­தாக கோவை மாவட்­டத்­தில் பல்­வேறு இடங்­களில் தேர்­தல் பிர­சா­ரம் செய்­தார்.

கோவையில் அவர், 'தொழில் களுக்குத் தோள் கொடுப்­போம்' எனும் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று பேசி­னார்.

"தொழில் துறை­யின் முது ­கெலும்­பாக கோவை திகழ்­கிறது. மத்­திய அரசு அறி­மு­கம் செய்த ஜிஎஸ்டி சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களைப் பாதிக்­கின்­றன. காங்­கி­ரஸ் ஆட்­சிக்கு வந்­த­தும் 'ஒரே வரி; குறைந்­த­பட்ச வரி' என ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை எளி­மை­யாக்­கப்­படும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

"விவ­சா­யி­க­ளுக்கு பாத­க­மாக வேளாண் சட்­டத்­தி­ருத்த மசோதா உள்­ளது. நாங்­கள் ஆட்­சிக்கு வந்ததும் மூன்று வேளாண் சட்­டங்­களை நீக்குவோம். கடந்த காலங்­களில் தமி­ழ­கம்தான் தொழில் துறை, உற்­பத்தித் துறை­யில் சிறந்து விளங்­கி­யது.

"தமி­ழ­கம் நாட்­டிற்கே முன்­னு­தா­ர­ண­மாக இருந்­தது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அவ்­வ­ளவு பெரு­மை­ களை­யும் தமி­ழ­கம் தற்­போது இழந்துகொண்­டி­ருக்­கிறது," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

திருப்­பூர் கும­ரன் நினை­வி­டத்­தில் ராகுல் அஞ்­சலி செலுத்­தி­னார்.

பின்­னர் திருப்­பூர் செல்­லும் வழி­யில் அவி­நா­சி­லிங்­கம்­பா­ளை­யம் பிரி­வில் சாலை­யோ­ரம் உள்ள ஒரு பேக்­கரி முன் வாக­னத்தை நிறுத்­தச் சொல்லி ராகுல் கடைக்­குள் சென்­றார். அங்கு அமர்ந்து தேநீர் குடித்­துக்கொண்டே கடைக்­கா­ர­ரி­டம் பேசி­னார்.