குளத்தில் விழுந்த 3 குழந்தைகள் சடலமாக மீட்பு

ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த மூன்று ஆண் குழந்­தை­கள் குளத்­தில் விழுந்து இறந்­தன.

கட­லூர் மாவட்­டம் வேப்­பூரை அடுத்த திருப்­பெ­யர் கிரா­மத்­தைச் சேர்ந்த மணி­கண்­டன்-மல்­லிகா தம்­ப­திக்கு விவே­கன் என்ற மகன் உண்டு. மல்­லி­கா­வின் சகோ­தரி மணி­மே­கலை இலங்­கி­ய­னு­ரில் வசித்து வந்­தார். சில நாள்­க­ளுக்கு முன், தங்­கை­யைப் பார்க்க திருப்­பெ­யர் கிரா­மத்­துக்கு தன் இரட்­டை­யர் மகன்­க­ளான விக்­னேஷ், சர்­வே­சு­டன் மணி­மே­கலை சென்­றி­ருந்­தார்.

திங்­க­ளன்று மாலை 5 மணி­ய­ள­வில் வீட்­டின் அருகே விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த விக்­னேஷ், சர்­வேஷ், விவே­கன் ஆகிய மூன்று குழந்­தை­க­ளை­யும் நீண்ட நேர­மா­கி­யும் காண­வில்லை. இது­கு­றித்து வேப்­பூர் காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டது.

வீட்­டின் அரு­கில் உள்ள சின்­னேரி குளத்தின் கரை­யில் சிறு­வர்­கள் நடந்து சென்ற கால்­த­டங்­கள் பதிந்து இருப்­ப­தாக போலி­சுக்­குத் தக­வல் கிடைத்­தது. இத­னால், குழந்­தை­கள் குளத்­தில் விழுந்து இருக்­க­லாம் என்­கிற சந்­தே­கத்­தின் தீய­ணைப்பு வீரர்­கள் இர­வி­லேயே தேடு­தல் பணியைத் தொடங்­கி­னார்.

நீண்ட நேரத் தேடு­த­லுக்­குப் பிறகு நள்­ளி­ரவு 12 மணி­ய­ள­வில் விக்­னேஷ், சர்­வேஷ் ஆகி­யோ­ரின் சட­லங்­களை தீய­ணைப்­புப் படை­யி­னர் மீட்­ட­னர்.

விவே­க­னின் உடல் மட்­டும் கிடைக்­க­வில்லை. இத­னால், கட­லூ­ரி­லி­ருந்து பேரி­டர் மீட்­புக் குழு வர­வ­ழைக்­கப்­பட்­டது.

அக்­கு­ழு­வி­னர் நேற்று காலை 7 மணி­ய­ள­வில் குளத்­தில் இறங்கி படகு மூலம் தேடி விவே­க­னின் சட­லத்தை மீட்­ட­னர்.

சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று குழந்­தை­கள் உட­லை­யும் வேப்­பூர் போலிசார் உடற்­கூராய்­வுக்­காக விருத்­தா­ச­லம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!