ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லம் திறப்பு

சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

“பெண்கள், குழந்தைகளுக்கு ஜெயலலிதா அரணாக விளங்கியது போல், தற்போது அதிமுக அரசும் அரணாக விளங்கி வருகிறது.

“ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்,” என அறிவித்தார்.

ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த ஆளுயர குத்து விளக்கையும் அவர்கள் ஏற்றி வைத்தனர்.

இதற்கிடையே, வேதா இல்லம் தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் தொடர்ந்த வழக்கின் தொடர் பில், வேதா இல்லத்திற்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வேதா இல்லம் திறப்பு விழாவை அடுத்து, மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள ‘லேடி வெலிங்டன்’ கல்லூரி வளா கத்தில் ஜெயலலிதாவின் ஒன்பது அடி உயர வெண்கலச் சிலையையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இந்தச் சிலை திறப்பின்போது நடிகர் அஜித்தின் ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா வானூர்தி மூலம் ஜெயலலிதா சிலை மீது அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மலர் தூவச் செய்தனர்.

தமிழக அரசியல் களத்தில் ‘அயர்ன் லேடி’ என வர்ணிக்கப் படும் ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். 24,000 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடிகளுடன் அமைந்துள்ள இவரது வேதா இல்லத்தில் நகரும் வகையில் 32,721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8,376 புத்தகங்கள், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய தங்கம், வெள்ளிப் பொருட்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!