யானைக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

சிறப்பு புத்­து­ணர்வு முகா­மிற்கு அழைத்து வரப்­படும் யானை­க­ள் கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு சான்­றி­தழ் பெற்­றி­ருந்­தால் மட்­டுமே சிறப்பு முகா­மிற்­குள் செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­படும் என இந்து சமய அற­நி­லை­யத்­துறை தெரி­வித்­துள்­ளது.

ஒவ்­வோர் ஆண்­டும் தமி­ழக அர­சின் சார்­பில் யானைகளுக்குச் சிறப்பு புத்­து­ணர்வு முகாம் நடத்­தப்­படுவது வழக்கம்.

ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா கிரு­மிப் பர­வ­லின் கார­ண­மாக யானை­களுக்கு இந்தச் சிறப்பு முகாம் நடத்­தப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், கோவை மாவட்­டம், மேட்­டுப்­பா­ளை­யத்­தில் உள்ள பவானி ஆற்­றங்­க­ரை­யோ­ரம் யானை ­கள் புத்­து­ணர்வு முகாமை நடத்து வதற்கு அனு­மதி அளித்து அர சாணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

யானை­க­ளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு இல்­லை­யென்று சான்­றி­தழ் பெற­வேண்­டும். யானை­ப் பாகன்­கள் உள்­ளிட்ட பணி­யா­ளர்­க­ளும் 24 மணி நேரத்­திற்கு முன்பாக கொரோனா பரி­சோ­தனை சான்­றி­தழைப் பெற்­றி­ருக்க வேண்­டும் என்றும் கூறப்­பட்­டுள்­ளது.

யானைகளை லாரிகளில் ஏற்று வதற்கு முன்பு லாரியை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

லாரி­களில் ஏற மறுக்­கும் யானை­களை வலுக்­கட்­டா­ய­மாக அழைத்து வரக்­கூ­டாது என்­றும் உடல்நலம் பாதிக்­கப்­பட்டுள்ள யானை­க­ளை­ அழைத்து வரவேண்டாம் என்­றும் இந்து சமய அற­நிலையத்துறை சுற்­ற­றிக்­கை­யில் தெரி­வித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!