தடுப்பூசி போடுவதற்கு தமிழக மக்கள் தயக்கம்

தடுப்பூசி போடுவதற்கு தமிழக மக்கள் தயக்கம்

1 mins read
0667ad0f-e491-461b-81dc-4f8e5fbcb70a
உயிர் பயம், பக்க விளைவு, விழிப்புணர்வு இல்லாமையே காரணங்கள் -

இந்­திய மாநி­லங்­கள் பல­வற்­றி­லும் கொரோனா த­டுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள மக்­கள் மிகுந்த ஆர்­வம் காட்டி வரும் நிலை­யில், தமி­ழ­கத்­தில் மட்­டும் இந்த வேகம் மந்த நிலை­யில் உள்ளதாகக் கூறப்­ப­டு­கிறது.

தடுப்­பூசி பற்­றிய விழிப்­பு­ணர்வு போதிய அள­வில் இல்­லா­தது, உயிர் பயம், ஆண்­மைக் குறைவு உள்­ளிட்ட பக்கவிளை­வு­கள் ஏற்­ப­ட­லாம் எனப் பரவும் வதந்­தி­களை நம்­பு­வது ஆகி­யவையே மக்கள் தடுப் பூசியைத் தவிர்ப்பதற்கான கார­ண மா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

தமி­ழ­கத்­தில் அதி­க­பட்­ச­மாக கடந்த 18ஆம் தேதி மட்­டும் 10,256 பேருக்குத் தடுப்­பூசி போடப்­பட்­டது.

அதைத்­தொ­டர்ந்து தடுப்­பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக் கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் அதி­க­பட்­ச­மாக 4,31,879 பேர் இந்த தடுப்­பூசியைப் போட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து, கர்­நா­ட­கா­வில் 3,07,752 பேரும் ராஜஸ்­தா­னில் 2,73,866 பேரும் ஆந்­தி­ரா­வில் 1,77,856 பேரும் தெலுங்­கா­னா­வில் 1,57,831 பேரும் கேர­ளா­வில் 1,35,832 பேரும் தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் வரும் டிசம்­பர் மாத இறு­திக்­குள் 1 கோடியே 86 லட்­சம் மக்­க­ளுக்குத் தடுப்­பூசியைப் போடு வதற்கு அரசு திட்­ட­மிட்டுள்­ளது.

இந்நிலை­யில், தடுப்­பூசி போடத் தொடங்கி நேற்­றைய 14வது நாள் நில­வ­ரப்­படி 2,60,600 பேருக்கு தடுப்­பூசி செலுத்த நட­வ­டிக்கை எடுத்­தும் தமி­ழ­கத்­தில் 97,126 மருத்­து­வப் பணி­யா­ளர்­களே தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொண்டு உள்­ள­னர். இது 37.27 விழுக்காடே ஆகும்.

மற்ற மாநி­லங்­களைவிட தமி­ழ­கத்­தில் தடுப்­பூசி போடு­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்து வரு­வது கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.