திறப்புவிழாவின்போதே 'அம்மா மினி கிளினிக்'கின் நடைபாதை சுவர் இடிந்து இருவருக்கு காயம்

கரூரில் ‘அம்மா மினி கிளினிக்’ மருத்துவமனை திறப்பு விழாவின்போது, கட்டடத்தின் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது.

அதனையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.

கரூர் மாவட்டம் கொசூரில் ‘அம்மா மினி கிளினிக்’ அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அங்கு புதிய கட்டடம் இல்லாததால் அங்கிருந்த சமுதாயக் கூடத்தை தற்காலிகமாக ‘அம்மா மினி கிளினிக்’காகப் பயன்படுத்த முடிவு செய்து செய்யப்பட்டது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நேற்று மாலை மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

திறப்பு விழா முடிந்து அமைச்சர் வெளியே வரும் முன்பே, கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய சாய்வு தளத்தின் கை பிடி சுவர் இடிந்து விழுந்தது.

இதில், அருகில் நின்றிருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு இருந்த மக்களிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!