அறுவடை செய்யாமல் விட்ட சோளப்பயிர்களைச் சாப்பிட்ட 100க்கு மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

அறுவடை செய்யாமல் விட்ட சோளப்பயிர்களைச் சாப்பிட்ட 100க்கு மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

1 mins read
4b06a61e-090a-4088-a2cf-1b9dad93f948
உயிரிழந்த ஆடுகளைப்பார்த்து கதறி அழுத உரிமையாளார்கள். படம்: இந்திய ஊடகம் -

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வவ்வால்தொத்தி கிராமத்தில் அறுவடை செய்யாமல் நிலத்தில் கைவிடப்பட்ட வெள்ளைச்சோளப் பயிரில் மேய்ச்சலுக்கு சென்ற 101 ஆடுகள் உயிரிழந்தன.

இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்குமென ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக கோவில்பட்டி கோட்டத்தில் உள்ளசுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.

பயிர்களை அறுவடை செய்யாமல் பெரும்பாலான விவசாயிகள் அப்படியே விட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் வவ்வால்தொத்தி கிராம எல்லையில் வெள்ளைச்சோளம் பயிரில் சிலர்ஆடுகளை மேயவிட்டனர்.

இரவு வீடுகளுக்கு திரும்பியதும் தொழுவத்தில் தண்ணீர் குடித்த ஆடுகள் மூச்சுவிட திணறின.

சில மணி நேரங்களிலேயே 101 ஆடுகள் உயிரிழந்தன. மீதமுள்ள ஆடுகளை காப்பாற்ற அதனை வளர்ப்போர் தங்களுக்கு தெரிந்த கை வைத்தியத்தை செய்தனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவரும் சில ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இறந்த ஆடுகளுக்கு உடற்கூராய்வு செய்த னர். அதன் மாதிரிகளை ஆய்வு செய்தவற்காக எடுத்துச்சென்றனர்.

அறுவடை செய்யாமல் விடப்பட்ட பயிர்கள் உள்ள நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என விவசாயிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
உயிரிழப்பு