தனித்துப் போட்டியிட தேமுதிக ஆயத்தம்

தனித்துப் போட்டியிட தேமுதிக ஆயத்தம்

2 mins read
0dc7a8c8-6127-4d21-80b7-0ca839776690
பிரேமலதா விஜயகாந்த். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

அதி­முக கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­படும் விஜ­ய­காந்­தின் தேமு­திக கட்சி வரு­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தனித்­துப் போட்­டி­யி­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதன் தொடர்­பில் பேசிய அக்­கட்­சி­யின் பொரு­ளா­ளர் பிரே­ம­லதா, தனித்­துப் போட்­டி­யி­டு­வ­தற்­கும் தயா­ராக இருக்க வேண்­டும் என்று தமது கட்­சித் தொண்­டர்­களை கேட்டுக்கொண்டார்.

சட்­ட­சபை தேர்­த­லில் அதி­முக அல்­லது திமு­க­வு­டன் கூட்­டணி அமைக்க தேமு­திக ரக­சிய பேச்சு நடத்தி வரு­கிறது.

அதி­மு­க­வில் 10 தொகு­தி­கள் வரை தரு­வ­தாக உறுதி அளிக்­கப்­பட்டு உள்­ளது. ஆனால் பாம­க­போல முக்­கி­யத்­து­வம் தரா­த­தால் தேமு­திக தலைமை அதி­ருப்தி அடைந்­துள்­ளது.

இந்த நிலை­யில் சில நாட்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற தேமு­திக மண்­டல, மாவட்ட, சட்­ட­சபை தொகுதி பொறுப்­பா­ளர்­கள் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் தனித்­துப் போட்­டி­யி­டு­வது குறித்து பேச்சு எழுந்­துள்­ளது.

சென்­னை­யில் உள்ள கட்­சித் தலைமை அலு­வ­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடந்த கூட்­டத்­தில் பிரே­ம­லதா, துணைச் செய­லர் சுதீஷ் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

ஒவ்­வொரு ஊராட்­சிக்­கும் 10 பேர் குழு அமைக்க வேண்­டும். 10 ஊராட்­சி­க­ளுக்­கும் சேர்த்து மற்­றொரு குழு அமைக்க வேண்­டும். நக­ராட்சி, பேரூ­ராட்­சி­க­ளுக்கு தனித் தனி­யாக குழு அமைக்க வேண்­டும். நிர்­வா­கி­கள் மற்­றும் தொண்­டர்­க­ளின் வீடு­களில், கட்சிக் கொடி ஏற்ற வேண்­டும். சுவர் விளம்­ப­ரங்­களை அதி­க­ள­வில் செய்ய வேண்­டும். தேர்­தல் பொறுப்­பா­ளர்­கள், தொகு­தி­களில் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து, கட்சிப் பணி­களில் கவ­னம் செலுத்த வேண்­டும். கட்சி நிகழ்ச்­சி­களில் புடவை, வேட்டி வழங்க வேண்­டும் என கூட்­டத்­தில் அறி­வு­றுத்­தப்­பட்­டது.

இதில் பேசிய நிர்­வா­கி­கள் பல­ரும் பாமக அல்­லாத கூட்­ட­ணி­யில் இடம்­பெற வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னர். இதனை பரி­சீ­லிப்­ப­தாக பிரே­ம­லதா உறு­தி­ய­ளித்து உள்­ளார்.

தனித்­துப் போட்­டி­யி­டும் சூழ்­நி­லை­யில் அதற்­கும் நிர்­வா­கி­கள் தயா­ராக இருக்க வேண்­டும் என்று பிரே­ம­லதா வலி­யு­றுத்­தி­னார்.