மதுரையில் கட்டடச் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் பலி

மதுரையில் கட்டடச் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் பலி

1 mins read
87154a62-bb08-48cf-a27a-e71ad2093c0d
படம்: இந்திய ஊடகம் -

மதுரை மேல மாசி வீதியில் வர்த்தகக் கட்டடச் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

அந்த வீதியில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான பழமையான குடியிருப்பு ஒன்று இருக்கிறது.

அந்த கட்டடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள இன்று காலையிலிருந்து வேலை நடந்து வந்தது. சுமார் 10 பேர் அங்கு வேலை செய்துகொண்டிருந்தனர்.

அதற்கு எதிர்ப்புறம் இருந்த கட்டடச் சுவர் இடிந்து விழுந்தது.

அந்த விபத்தில் சிக்கிய 3 பேரை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்