அமைச்சர்: சசிகலா மீது வழக்கு

விழுப்­பு­ரம்: பெங்­க­ளூரு விக்­டோ­ரியா அரசு மருத்­து­வ­ம­னை­யில் இருந்து நேற்று முன்­தி­னம் விடு­விக்­கப்­பட்டார் வி.கே.சசி­கலா.

அவர் ஏறிச்­சென்ற கார் ஜெய­லலிதா உப­யோ­கப்­ப­டுத்­தி­ய கார் என்றும் அந்தக் காரில் அதிமுக கொடி பறந்தது குறித்தும் தமிழக அரசியல் வட்­டா­ரத்­தில் பெரும் சலசலப்பு ஏற்­பட்­டது.

மீன்­வ­ளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார் ஒரு­பக்­கம், சட்ட அமைச்­சர் சிவி சண்­மு­கம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி மறு­பக்­கம் என அடுத்­தடுத்து செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து அர­சி­யல் களத்தை சூடேற்றி வருகின்றனர்.

விழுப்புரத்தில் செய்தியாளர் களிடம் பேசிய சட்டத்துறை அமைச் சர் சி.வி.சண்முகம், “அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்தை சசிகலா பயன்படுத்தக்கூடாது,” என்று வலியுறுத்தி உள்ளவர், “அதிமுக கொடியைச் சட்டவிரோத மாகப் பயன்படுத்தி உள்ள சசிகலா மீது நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுப்போம்,” என்றார்.

இந்நிைலயில், வழக்கறிஞர் களுடன் சசிகலா கலந்­தா­லோ­சித்த பிறகே காரில் அதி­முக கொடி கட்­டப்­பட்­ட­தாகவும் சொல்­லப்­ப­டு­கிறது.

“கைதா­கும்­போது அதி­மு­க­வின் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கத்­தான் இருந்­தீர்­கள். அத­னால் அதி­முக கொடி­யு­டன் போனால்­தான் தொண்­டர்­களும் பல­ மடங்கு உற்­சா­க­மா­வார்­கள்” என்றும் சொல்லியுள்ளனர்.

“பொதுச் செய­லா­ளரை யாரும் நீக்கமுடி­யாது. சசி­க­லா­தான் பொதுச் செய­லா­ள­ராக இன்­ன­மும் தொடர்ந்துகொண்­டி­ருக்­கி­றார்,” என்று டிடிவி தின­க­ரன் சொன்­ன­தும் இதை மன­தில் வைத்­து­தான் என்­றும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, சசி­கலா காரில் அதி­முக கொடி கட்­டப்­பட்­டதை சட்ட மீற­லா­கத்­தான் கரு­த­மு­டி­யும் என்று அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து சென்­னை­யில் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “சசி­கலா காரில் அதி­முக கொடி­கட்­டப்­பட்­டி­ருப்­பது ஏற்கமுடி­யா­தது. அடிப்­படை உறுப்­பி­ன­ரா­கக்­கூட இல்­லா­த­வர் எப்­படி கட்­சிக் கொடியைப் பயன்­ப­டுத்த முடி­யும்.

“அவ­ருக்­கும் கட்­சிக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை என்று அதி­முக பொதுக்­கு­ழு­வில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது,” என்றார்.

“டிடிவி தினகரன் தனிப்பட்ட முறையில் அரசியல் நடத்துவதற்காக தொடங்கப்பட்ட கட்சிதான் அமமுக. அதை அதிமுகவுடன் இணைக்கும் வாய்ப்புக்கே இடமில்லை. ஆனால், டிடிவி தினகரன், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் அளித்தால் அவரை அதிமுகவில் இணைக்க தலைமை பரிசீலனை செய்யும்.

“அப்படியும் அவர் அதிமுகவில் ஏற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர் என தலைமை முடிவு செய்தால் அவரது கடிதம் குப்பைத் தொட்டிக்கு சென்றுவிடும்,” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

பெங்­க­ளூரு விக்­டோ­ரியா அரசு மருத்­து­வ­ம­னை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்ட ­வி.கே.சசி­கலாவைக் காண ஏரா­ள­மான ஆத­ர ­வா­ளர்­கள் மருத்­து­வ­மனை வாயிலில் காத்­தி­ருந்தனர். சிலர் கையில் பதாகை களையும் பிடித்திருந் தனர். அவர்கள் சசிகலா வாழ்க என உற்சாக முழக்கமிட்டு வாழ்த்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!