பிரியாணி உண்ணும் போட்டியில் தங்கம் வென்ற இளைஞர்

2 mins read
5b6c00db-7977-412f-bd22-49a6bd7dd74b
படம்: ஊடகம் -

கள்­ளக்­கு­றிச்சி: ஆங்­காங்கே நடை­பெற்று வரும் பரோட்டா, மாம்­ப­ழம் தின்னும் போட்­டி­யைப் போல கள்ளக்­கு­றிச்சி மாவட்­டம், சின்­ன­சேலத்­தில் பிரி­யாணி உண்­ணும் போட்டி நடைபெற்றது.

10 நிமி­டத்­தில் ஒரு கிலோ பிரி­யா­ணியைச் சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு தங்­கம், வெள்­ளிக் காசு­கள் பரி­சாக வழங்­கப்­பட உள்­ள­தாக 'ஈட்­டிங் சேலஞ்ச் பாய்ஸ்' என்ற அமைப்­பி­னர் அறி­வித்­தி­ருந்­த­னர்.

இதை­ய­டுத்து, ஏரா­ள­மான பிரி­யாணி பிரி­யர்­கள் இப்­போட்­டி­யில் பங்­கெ­டுக்­கத் திரண்­ட­னர்.

இவர்­களில், கள்­ளக்­கு­றிச்சி அரு­கே­யுள்ள உல­கங்­காத்­தான் கிரா­மத்­தைச் சேர்ந்த ராம­கி­ருஷ்­ணன் என்ற 21 வயது இளை­யர் நான்­கரை நிமி­டத்­துக்­குள் ஒரு கிலோ பிரியாணி­யைச் சாப்­பிட்டு மற்றவர்களை அசரவைத்தார்.

இந்­நி­லை­யில், ராம­கி­ருஷ்ண னுக்கு ஒரு கிரா­ம் தங்­கக் காசும் பதக்கமும் பரிசளிக்கப்­பட்­டது.

இரண்­டாம் பரி­சாக 10 கிராம் வெள்­ளிக் காசு, மூன்­றாம் பரி­சாக ஐந்து கிராம் வெள்­ளிக் காசு என போட்­டி­யில் அடுத்­தடுத்து வென்ற இளை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

ஆனால், இதுபோன்ற போட்டியில் கலந்துகொள்வது குறித்து உணவுக் குழாய் மற்றும் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்த் எச்சரித்துள்ளார்.

"உண்மையிலேயே இதுபோன்ற உணவுப் போட்டிகளில் கலந்து கொள்வது என்பது விஷப் பரிட்சை தான்.

"சாப்பிடுவதற்கென சில முறைகள் இருக்கின்றன. பொறுமை யாக மென்று சாப்பிட்டால்தான் அந்த உணவு எந்தச் சிக்கலும் இன்றி இரைப்பைக்குச் செல்லும். வேகவேகமாக உணவை விழுங்கும் போது உணவுக் குழாயின் ஓட்டமும் நாம் உணவு விழுங்கும் வேகமும் ஒருசேர இல்லாமல் போகும். இந்த சூழலில் உணவுக்குழாய் வெடிப்பதற் கான வாய்ப்புள்ளது.

"வேக வேகமாக உணவை உண்ணும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதற்கான சூழலும் உள்ளது," என்று மருத்துவர் ஆனந்த் கூறியுள்ளார்.

10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணியை உண்ணும் போட்டி நடந்தது.

வலது படம்: போட்டியில் கலந்து கொண்டு ஒரு கிராம் தங்கக் காசு, வெற்றிப் பதக்கத்தைத் தட்டிச் சென்ற

இளையர்

ராமகிருஷ்ணன்.

படம்: ஊடகம்