இளவரசி, சுதாகரனின் மேலும் சில சொத்துகள் பறிமுதல்

இளவரசி, சுதாகரனின் மேலும் சில சொத்துகள் பறிமுதல்

2 mins read
e94ed390-2b03-4a83-8090-8c492b941b35
-

சென்னை: சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவியான இளவரசிக்கும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனுக்கும் சொந்தமான ஆறு சொத்துகள் அரசுடைமை ஆக்கப்படுவ தாக சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்திருந்தார். இந்நிலையில், சுதாகரன், இள வரசியின் மேலும் சில சொத்து களையும் தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுதாகரன், இள வரசிக்குச் சொந்தமான சொத்து கள் அரசுடைமையானது. சென்னை மாவட்டத்தில் இருவரின் சொத்துகளையும் அரசு முடக்கிய நிலையில், மேலும் இரு மாவட்டங்களில் உள்ள சொத்து களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஊத்துக்காடு பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மாவட்ட நிர்வாகம் கைப்பற்றியுள்ளது.அதேபோல் செங்கல்பட்டு செய்யூர் பகுதியில் உள்ள நிலமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு இவ் வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தண்டனையில் இருந்து விடுதலையான சசிகலாவும் இளவரசியும் இன்று பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பினர். இந்நிலையில், இளவரசி, சுதா கரனின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. சென்னை டிடிகே சாலை, ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகளும் சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள ஐந்து சொத்துகளும் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

இவற்றின் வழி கிடைக்கும் வாடகையும் இதர வருவாயும் தமிழக அரசுக்குச் சொந்தம் என்றும் சீதாலட்சுமி அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.