தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகம் திரும்பிய சசிகலாவின் வரவேற்பில் பயங்கரம்; இரண்டு கார்கள் தீயில் எரிந்தன

2 mins read
0fa8f1e6-8aa6-4557-b892-98e9179bff0b
பட்டாசு வெடிப்பதற்கும் 'பேண்டு' வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை என்றும் கொடி, தோரணங்கள், விளம்பரப் பலகைகளை அனுமதியின்றி வைக்கக்கூடாது என்றும் வி.கே.சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின்தொடரலாம் என்றும் போலிசார் ஆறு தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தனர். ஆனாலும், தடையை மீறி பட்டாசு வெடித்து, இரு கார்கள் தீயில் எரிந்து நாசமாகின. படம்: ஊடகம் -

கிருஷ்­ண­கிரி: சொத்­துக்குவிப்பு வழக்­கில் தனது தண்­ட­னைக் காலம் முடிந்து, ராகு காலத்­துக்கு முன்­பாக பச்சை நிற புடவையுடன் நான்கு ஆண்டுகளுக்­குப் பிறகு தமி­ழ­கத்­துக்குத் திரும்­பிக்கொண்­டி­ருந்­தார் வி.கே.சசி­கலா.

அப்­போது, கிருஷ்­ண­கிரி சுங்­கச் சாவ­டி­யில் சசி­க­லாவை வர­வேற்ப தற்­காக வந்த கார்­களில் இரண்டு கார்­களில் தீப்­பற்­றி­யது.

இந்த காருக்குள் பட்­டா­சு­கள் இருந்­த­தால், பட்­டாசு வெடிக்­கும் போது அதி­லி­ருந்து கிளம்­பிய தீப்­பொறி பட்டு காரில் தீ பர­வி­யதாகக் கூறப்படுகிறது.

அதன்­பின்­னர், தீய­ணைப்­புத் துறை­யி­னர் தீயை அணைக்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

"சசி­க­லாவை வர­வேற்க வழி­நெ­டு­கி­லும் பட்­டா­சு­கள் வெடிக்க அம­மு­க­வி­னர் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். இதற்­காக பட்­டா­சு­கள் ஏற்­றப்­பட்­டி­ருந்த காரில், சாலை­யில் வெடிக்­கப்­பட்ட பட்­டா­சின் தீப்­பொறி பட்டு தீவிபத்து நேரிட்­ட­தால், அரு­க­ருகே இருந்த இரண்டு கார்­கள் எரிந்து சேத­ம­டைந்­த­ன," என்று முதற்­கட்ட விசாரணை குறித்து போலிசார் தக­வல்­ தெரி­வித்துள்ளனர்.

கர்­நா­ட­கா­வில் இருந்து தமி­ழ­கத்­துக்குப் புறப்­பட்ட சசி­கலா ஜெய­லலி­தா­வின் புகைப்­ப­டத்­துக்கு மல­ரஞ்­சலி செலுத்­தி­விட்டு, அதி­முக கொடியை வெற்­றிக் கொடி­போல் தனது காரில் பறக்க விட்­ட­படி நேற்று காலை­யில் வந்துகொண்­டி­ருந்­தார்.

இதையடுத்து காரில் உள்ள அதி­முக கொடியைப் போலி­சார் அகற்­றிய நிலை­யில், சசி­கலா அதி­முக கொடி பொருத்­தப்­பட்ட வேறு ஒரு காரில் பய­ணம் செய்­தார்.

இந்­நி­லை­யில், கிருஷ்­ண­கிரி எல்­லை­யில் அவ­ரது காரை போலி­சார் தடுத்து நிறுத்­தி­னர்.

பின்­னர், சசி­கலா செல்­லும் காரில் அதி­முக கொடி இருப்­பது சட்­டப்­படி குற்­றம் என்று கூறி கிருஷ்­ண­கிரி ஏடி­எஸ்பி சக்­தி­வேல், சசி­க­லா­வின் வழக்­க­றி­ஞர் ராஜா செந்­தூர் பாண்­டி­ய­னி­டம் நோட்­டீஸ் ஒன்றை அளித்­தார். ஆனாலும், காரில் இருந்த கொடி அகற்­றப்­ப­ட­வில்லை.

அதன்­பின்­னர், இரு கார்­களும் தீப்­பி­டித்து எரிந்த நிலை­யில், மிகக்­கு­றைந்த அள­வி­லான கார்­கள் மட்­டுமே சசி­க­லாவைப் பின்­தொ­டர்ந்து செல்லும் வகை­யில் அவ­ரது பய­ணம் தொடர்ந்­தது.

நேற்று காலை­யில் இருந்தே தமி­ழ­கம் ஒரு­பக்­கம் ஒரு­வி­த­மான பர­ப­ரப்­பான சூழ்­நி­லை­யி­லும் மறு­பக்­கம் பதற்­ற­மான சூழ்­நிலையிலும் இருந்து வந்­தது.

அம­மு­க­வின் தொண்­டர்­கள் உற்­சா­க­மா­க­வும் அதி­மு­க­வி­னர் சற்று பதற்­றத்­தி­லும் இருப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

திமுக நடப்­பதை எல்­லாம் வேடிக்கை பார்த்­துக் கொண்டிருந்­தது. திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின், "ஒரு­வர் பெங்­க­ளூ­ரு­வில் இருந்து புறப்­பட்டுவிட்­டார். இனி நடக்கவேண்­டி­யது எல்லாம் தானாகவே நடக்­கும்,'' என்று தெரி­வித்­தார்.