தங்கச் சங்கிலிக்காக பெண்ணை குளத்தில் தள்ளி கொன்ற திருடன் கைது

அங்­கா­டி­யில் விற்­கப்­படும் மலிவு விலை­யி­லான பொருள்­களை வாங்­கிக்­கொண்டு பெண் ஒரு­வர் கன்­னி­யா­கு­ம­ரி­யில் நடந்­த­படி வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்­தார்.

அப்­போது, அவர் அணிந்­தி­ருந்த தங்­கச் சங்­கி­லி­யைப் பறிக்க ஒரு கும்­பல் முயன்­றுள்­ளது.

இதை எதிர்த்து அந்தப் பெண் கூச்சலிட்டுப் போராடி உள்­ளார்.

இந்­தச் சத்­தம் ஊர் மக்­க­ ளின் காதில் விழா­மல் இருக்க, பெண்ணை அரு­கில் இருந்த குளத்­துக்­குள் தள்ளிவிட்­டு­ திருட்­டுக் கும்­பல் தப்பி ஓடி­விட்­டது.

குளத்­தில் நீர் அதி­கம் இருந்த நிலை­யில், பெண்­ கரை­யேற முடி­யா­மல் உயி­ரி­ழந்­தார்.

கொலைக்கு முக்­கிய காரண மாக இருந்த மெர்­லின் ராஜா­வைப் பிடித்த பொது­மக்­கள் அவ­ருக்கு தர்ம அடி கொடுத்து, அவரை போலி­சா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

மக்­க­ளால் பலத்த காய­ம­டைந்த மெர்­லின் ராஜா மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், பூந்­தோப்பு புன்­னத்­து­விளை பகுதி யைச் சேர்ந்­த­வர் வின்­சென்ட். கட்­ட­டத் தொழி­லா­ளி­யான இவ­ரது மனை­வி­தான் மேரி ஜெயா.

நேற்று முன்­தி­னம் மாலை மூள­கு­மூடு பகு­தி­யி­லுள்ள ‘ரேஷன்’ கடைக்கு மேரி­ஜெயா சென்­று­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது, அவ­ரது சங்­கி­லி­யைப் பறிக்க மெர்­லின் ராஜா தனது கூட்டாளி­க­ளு­டன் கைவ­ரிசை காட்டியுள்­ளார்.

இதை­ய­டுத்து, மேரி­ ஜெயா கூச்சலிடவே, அல­றல் சத்­தம் கேட்டு ­மக்­கள் திரண்­டுள்­ள­னர்.

இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்த மெர்­லின் ராஜா­வும் அவ­னது கூட்­டா­ளி­களும் மாட்­டிக்கொள்­வோமோ என்ற பயத்­தில் மேரி­ஜெயாவை அரு­கி­லுள்ள குளத்­தில் தள்­ளி­விட்டுள்ளனர்.

மேரி­ ஜெயா உடல் மீட்­கப்­பட்டு உடற்கூறு பரி­சோதனைக்­காக ஆசாரிப்பள்­ளம் மருத்­துவ மனைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. தப்­பி­யோ­டி­ய­வர்­களைப் போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.

மெர்லின் ராஜா ராணுவத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்பட்ட வன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!