இரு தொகுதிகளில் டிடிவி தினகரன் போட்டி

தமி­ழ­கத்­தில் வரும் ஏப்­ரல் அல்­லது மே மாதங்­களில் நடக்­க­வுள்ள சட்­ட­மன்­றத் தேர்­த­லில் இரண்டு தொகு­தி­களில் போட்டி யிட உள்ளதாக அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­க­ரன் புதிய தக­வலை தெரி­வித்­துள்­ளார்.

சென்னை ஆர்கே நகர், தேனி மாவட்­டத்­தில் ஒரு தொகு­தி என இரண்டு தொகு­தி­களில் போட்­டி­யி­ட உள்ளதாக டிடிவி தின­க­ரன் செய்தியாளர்­க­ளி­டம் கூறி­னார்.

தேனி மாவட்­டத்­தில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவ தாகக் கூறிய தினகரன் அது எந்த தொகுதி என்­பதைக் கூறவில்லை.

தேனி மாவட்­டத்­தில் அவர் எம்­பி­யாகத் தேர்­வான பெரி­ய­கு­ளம் தற்­போது தனித்­தொ­கு­தி­யாக உள்­ளது. இதையடுத்து, கம்­பம், போடி அல்­லது ஆண்­டி­பட்­டி­யில் போட்­டி­யிடலாம் எனத் தெரி­கிறது.

ஆனால் டிடிவி தின­க­ரன் ஜெய­ல­லிதா வெற்றிபெற்ற ஆண்டி பட்டி தொகு­தி­யில் போட்­டி­யி­டவே அதிக வாய்ப்புள்­ள­தாகவும் சொல்­லப்­ப­டு­கிறது.

ஏனெ­னில், போடி தொகு­தி­யில் ஓ பன்­னீர்­செல்­வம் மீண்­டும் போட்­டி­யி­டு­வார் என்­ப­தால் அங்கு இரு பெரும் தலை­கள் போட்­டி­யிடும் வாய்ப்பு இல்லை. அதேவேளையில், டிடிவி தின­கரன் ஆண்­டி­பட்­டி­யில் நின்­றால் திமு­க­விற்கு போன தங்க ­த­மிழ்­செல்­வன் கடும் போட்­டி­யைச் சந்­திப்­பார் என்றும் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!