சசிகலா சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை, மரியாதை; விதிகளை மீறிய எழுவர் நீக்கம்

பெங்­க­ளூ­ரு­வில் இருந்து நேற்று அதி­காலை சென்னைக்குத் திரும்­பினார் சசி­கலா. அவருக்கு கட்சிக் கட்­டுப்­பாட்டையும் மீறி வர­வேற்­பளித்த ஏழு பேரை முதல்­வ­ரும் துணை முதல்­வ­ரும் அதிமுகவில் இருந்து நீக்­கி­யுள்­ள­னர்.

சொத்துக் குவிப்பு வழக்­கின் தொடர்­பில் நான்­காண்டு கால தண்­ட­னையை முடித்து­விட்டு, கொரோனா பாதிப்பில் இருந்­தும் மீண்டு ஒரு­வ­ழி­யாக நேற்று சென்னை வந்து சேர்ந்­தார் மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் தோழி வி.கே.சசி­கலா.

வழி­யெங்­கும் அவ­ரது காரின் மீது மலர்­க­ளைத் தூவி­யும் பட்­டாசு களை வெடித்­தும் வாணவேடிக்கை யுடன் உற்­சாகமாக சசி­க­லா­வை வர­வேற்­றனர் அம­மு­க கட்சியினர்.

இந்­நி­லை­யில், சென்னை வந்த சசி­கலா, 66, முத­லில் ராமா­வரம் தோட்­டத்துக்­குச் சென்று எம்­ஜி­ஆர், ஜானகி அம்­மாள் நினை­வி­டத்­தில் மல­ரஞ்­சலி செலுத்­தி­னார்.

தொடர்ந்து அங்­குள்ள எம்­ஜிஆர் சிலைக்கும் மாலை அணி­வித்து மரி­யாதை செய்­தார்.

அதன்­பின்­னர் சென்னை தி. ந­க­ரில் உள்ள இள­வ­ர­சி­யின் மகள் கிருஷ்ணபிரி­யா­வின் வீட்­டிற்­கு வந்­த­வர், ஜெய­லலி­தா­வின் படத்­திற்கு மலர்­தூவி வணங்கினார்.

இதைத்தொடர்ந்து, தி.நக­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் டிடிவி தின­கரன் கூறுகையில், “சசிகலாவை பார்க்கத் திரண்ட தொண்­டர்­களும் மக்­கள் கூட்­டமும் அவர் எந்த தவ­றும் செய்­ய­வில்லை என்­பதை மக்­கள் மன­தி­லி­ருந்து வெளிப்­ப­டுத்தி உள்­ளது.

“நடி­கர் ரஜி­னி­காந்த்தும் தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு சசி­க­லா­வின் உடல்­ந­லம் குறித்து விசா­ரித்­தார்,” என்றார்.

இந்நிலையில், முதன்­மு­றை­யாகச் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த சசி­கலா கூறுகையில், “ஜெய­ல­லி­தா­வின் பிள்ளைகள் என்­றுமே எனக்­கும் பிள்­ளை­கள்தான். ஒற்­று­மை­யாக ஓர­ணி­யில் நின்று நமது பொது எதி­ரியை மீண்­டும் தமி­ழக ஆட்­சிக் கட்­டி­லில் அம­ர­வி­டா­மல் வீழ்த்த இணைந்து செயல்­பட வேண்­டும் என்­பதே எனது எண்­ணம், என்­ குறிக்­கோள்.

“எம்ஜிஆர் கட்­டிக்­காத்து, ஜெய ­ல­லிதா வழி­யில் வெற்றிநடை­ போட்­டுக் கொண்­டி­ருக்­கும் இந்த மாபெ­ரும் இயக்­கம் சில­ரின் சொந்த விருப்பு வெறுப்­பு­க­ளால் சிதைந்து விடக்­கூ­டாது. அடக்­கு­மு­றை களுக்கு நான் என்­றும் அஞ்­ச­மாட்­டேன். தமி­ழக மக்­க­ளுக்­கும் என் தொண்­டர்­க­ளுக்­கும் நான் அடிமை,” என்று கூறினார்.

இதற்கிடையே, அதி­முக கொடி கட்­டிய காரை சசி­க­லா­விற்கு வழங்கி வர­வேற்பு அளித்­த கிருஷ்­ணகிரி மாவட்­ட அதி­முக நிர்­வாகி எஸ்.ஆர்.சம்­பங்கி உள்­ளிட்ட ஏழு பேரை அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்செல்­வம், துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழனி ­சாமி ஆகி­யோர் நீக்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“கழ­கத்­தின் கொள்கை, குறிக்­கோள்­க­ளுக்கு முர­ணாக செயல்­பட்­ட­தா­லும் கழ­கத்­தின் கண்­ணி­யத்­திற்கு மாசு ஏற்­படும் வகை­யில் நடந்துகொண்­ட­தா­லும் கிருஷ்­ண­மூர்த்தி, எஸ்.ஆர். சம்­பங்கி, பி.சந்­தி­ர­சே­கர ரெட்டி, ஜானகி ரவீந்­திர ரெட்டி, பிர­சாந்த் குமார், நாக­ராஜ், வி. ஆனந்த் ஆகிய நிர்­வா­கி­களை கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர் உள்­ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்­தும் நீக்­கப்­ப­டு­கின்­ற­ னர்,” என்று அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!