பொதுச் செயலாளர் பதவி: வழக்கு தொடுக்க சசிகலா முடிவு

அதி­முக பொதுச் செய­லா­ளர் பத­வி­யில் இருந்து தம்மை நீக்­கி­யது செல்­லாது என்று அறி­விக்­கக் கோரி சசி­கலா வழக்கு தொடுக்க வாய்ப்­புள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

மேலும், தாம் சிறைக்­குச் சென்ற பிறகு நடத்­தப்­பட்ட அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் செல்­லாது என்று அறி­விக்­கக் கோரி அவர் ஏற்­கெனவே தொடுத்­தி­ருந்த வழக்கை மீண்­டும் விசா­ரிக்­கக் கோரி அவர் நீதி­மன்­றத்தை அணுக இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சிறை­யில் இருந்து விடு­த­லை­யான பிறகு சசி­கலா தரப்­பின் அர­சி­யல் நட­வ­டிக்­கை­கள் வேக­மெ­டுத்­துள்­ளன. அவர் அதி­மு­கவை மீண்­டும் கைப்­பற்­று­வார் என அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் மத்­தி­யில் நம்­பிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் நடப்பு அதி­முக தலை­மைக்கு எதி­ராக சட்­டப்­போ­ராட்­டம் நடத்த அவர் முடிவு செய்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் சசி­கலா சிறைக்­குச் சென்ற பின்­னர் கடந்த 2017ஆம் ஆண்டு அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் அதி­மு­க­வின் நிரந்­த­ரப் பொதுச் செய­லா­ளர் ஜெய­ல­லி­தா­தான் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

மேலும், ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை, துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் பத­வி­கள் உரு­வாக்­கப்­பட்­டன. இதற்­காக அதி­முக சட்ட விதி­களும் திருத்­தப்­பட்­டன.

இத­னால் சசி­கலா தரப்பு கடும் அதி­ருப்தி அடைந்­தது. அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் செல்­லாது என அறி­விக்­கக் கோரி சென்னை நீதி­மன்­றத்­தில் சசி­க­லா­வும் தின­க­ர­னும் வழக்கு தொடுத்­த­னர்.

இவர்­க­ளது மனுவை விசா­ரித்த நீதி­பதி, தற்­போ­தைய நிலையே நீடிக்க வேண்­டும் என இடைக்­கால உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தார். எனி­னும் அதன் பிறகு இந்த வழக்­கில் இரு­த­ரப்­புமே கவ­னம் செலுத்­த­வில்லை.

இந்­நி­லை­யில் இந்த வழக்கை மீண்­டும் விசா­ரிக்­கக் கோரி சசி­கலா தரப்பு மிக விரை­வில் புதிய மனு ஒன்றை நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

மேலும், அதி­முக பொதுச் செய­லர் பத­வி­யில் இருந்து தம்மை நீக்­கி­யது செல்­லாது என்று அறி­விக்­கக் கோரி­யும் சசி­கலா தரப்­பில் மேலும் ஒரு வழக்கு தொடுக்­கப்­ப­ட­லாம் என்­றும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!