'நான் சொல்கிறேன்; முதல்வர் செய்கிறார்'

'நான் சொல்கிறேன்; முதல்வர் செய்கிறார்'

1 mins read
5f9d7402-61e2-4514-98c0-a6401ab1ad0e
ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் மக்கள். படம்: ஊடகம் -

முதல்­வ­ரின் தேர்­தல் வாக்­கு­று­தி­களைக் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கி­றார் திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின்.

நேற்று கட­லூ­ரில் பேசிய ஸ்டா­லின், "ஸ்டா­லின் சொல்­கி­றார், முதல்வர் பழ­னி­சாமி செய்­கி­றார். ஆண்­ட­வன் சொல்­றான், அரு­ணாச்­ ச­லம் முடிக்­கி­றான்," என்ற ரஜி­னி­யின் வச­னத்­தைக் கூறி தொண்­டர்­க­ளைச் சிரிக்க வைத்­தார்.

"திமுக ஆட்­சிக்கு வந்­தால் விவ­சா­யி­க­ளின் பயிர்க்­க­டன் தள்­ளு­படி செய்­யப்­படும்," என்று நான் முன்பு கூறி­யி­ருந்­தேன். அதன்­படி முதல்­வர் பயிர்­க்க­டனைத் தள்­ளு­படி செய்­து­விட்­டார் என்று ஸ்டா­லின் விமர்­சித்­தி­ருந்­தார்.

இதே­போல் திமுக ஆட்­சிக்கு வந்­தால் கல்­விக் கடன் ரத்து செய்­யப்­படும் என ஸ்டா­லின் இப்போது அறி­வித்­துள்­ளார். இதையடுத்து, மாண­வர்­கள் பெற்ற கல்­விக் கட­னை­யும் தேர்­த­லுக்கு முன்­பாக முதல்­வர் தள்­ளு­படி செய்­வாரா என்றும் ஸ்டா­லின் கேட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் குறைகளைக் கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை. கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே கண்டுபிடித்துவிடலாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.