பட்டாசு ஆலை வெடி விபத்து: 19 பேர் பலி; அறுவர் மீது வழக்கு

பட்டாசு ஆலை வெடி விபத்து: 19 பேர் பலி; அறுவர் மீது வழக்கு

2 mins read
bf3ea6dc-5589-4e25-90a0-5a797e084ff3
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த ஒருவரை தூக்கிச் செல்கின்றனர். 80% மேல் தீக்காயம் அடைந்த 30 பேர் சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த ஒருசிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படம்: ஊடகம் -

சாத்­தூர் அருகே பட்­டாசு ஆலை ஒன்­றில் ஏற்­பட்ட விபத்­தில் ஒரு பள்ளி மாணவி, திரு­ம­ணம் நிச்­ச­யிக்­கப்­பட்ட பெண், ஏழு மாத கர்ப்­பி­ணி­ப் பெண் உட்­பட 19 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

கர்ப்­பி­ணி­ப் பெண் பணி­யில் சேர்ந்து மூன்று நாட்­களே ஆகி­யிருந்த நிலை­யில், உயி­ரி­ழந்­தி­ருப்­பது மக்­களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்­திலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

விரு­து­ந­கர் மாவட்­டம், சாத்­தூர் அருகே உள்ள அச்­சங்­கு­ளம் கிரா­மத்­தில் வெள்­ளி­யன்று இந்தச் சம்பவம் நேர்ந்தது.

இந்த விபத்­தில் படு­கா­ய­ம­டைந்த 30 பேர் சாத்­தூர், சிவ­காசி, கோவில்­பட்டி, மதுரை அரசு மருத்­து­வ­மனை­களில் அனு­ம­திக்­கப்பட்­டுள்­ள­னர்.

இவர்­களில் பல­ருக்­கும் 80% மேல் தீக்­கா­யம் ஏற்­பட்­டுள்­ள­தால் பலி எண்­ணிக்கை மேலும் அதி கரிக்­கும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

இதையடுத்து, பட்டாசு ஆலை உரி­மை­யா­ளர், குத்­த­கை­தா­ரர் உட்­பட அறு­வரிடம் போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

விபத்து தொடர்­பாக விசா­ரணை நடத்த ஐந்து தனிப்­ப­டை­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

சந்­த­ன­மாரி என்­ப­வ­ருக்­குச் சொந்­த­மான மாரி­யம்­மாள் பட்­டாசு ஆலை­யில் உள்ள 30 அறை­களில் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் பணி புரிந்து வந்­த­னர்.

இந்த ஆலை­யில் 'பேன்சி' ரக வெடி­கள் தயா­ரிக்­கப்­பட்டு வந்த நிலை­யில், வழக்­கம்போல் தொழி லாளர்­கள் பட்­டா­சு­களில் மருந்தை நிரப்­பும் பணி­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது, உராய்வு காரணமாக தீவி­பத்து ஏற்­பட்டு அங்­கி­ருந்த பட்­டா­சு­கள் வெடித்­துச் சித­றின.

இதை­ய­டுத்து, அடுத்­த­டுத்த அறை­க­ளிலும் மள­ம­ள­வென தீ பரவி, பட்­டா­சு­கள் பயங்­க­ர­மாக வெடித்­த­தில் 15க்கும் மேற்­பட்ட அறை­கள் இடிந்து தரை­மட்­ட­மாகின.

வேம்­பக்­கோட்டை, சாத்­தூர், சிவ­கா­சி­ையச் சேர்ந்த தீய­ணைப்­புத்துறை­யி­னர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்­த­னர்.

இந்த விபத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­துக்குத் தலா ரூ.3 லட்­ச­மும் பலத்த காய­ம­டைந்­த­வர்­களுக்குத் தலா ஒரு லட்­சம் ரூபா­யும் நிவா­ரண நிதி வழங்கப்படும் என்று முதல்­வர் பழ­னி­சாமி அறி­வித்­துள்­ளார்.

இதேபோல் பிரதமர் மோடியும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகா ரத்தில் முறையாக விசாரணை நடத்தி, விதிமீறலில் ஈடுபடுபட்ட வர்கள் மீது தமிழக அரசு நட வடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.