ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை சொர்ணமலையில் அமைகிறது

ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை சொர்ணமலையில் அமைகிறது

1 mins read
d688f047-036a-490d-a1d2-605a56692808
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோயிலில் 135 அடி உயரத்தில் முருகன் சிலை நிர்மாணம் செய்யும் பணிகளை அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர். படம்: தமிழக ஊடகம் -

ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை கோயில்பட்டி அருகே உள்ள சொர்ணமலையில் அமைய உள்ளது. இம்மலை மீது கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு அருகே 135 அடி உயரமுள்ள முருகன் சிலையை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவின் பத்துமலை பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட முருகன் சிலை 108 அடி உயரமாகும்.

அச்சிலையை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராஜன் குழுவினர்தான் சொர்மணலை முருகன் சிலையையும் உருவாக்க உள்ளனர்.

இப்புதிய சிலை 123 அடியாகவும் அதற்கான பீடம் 12 அடியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி நிறுவப்பட்டால் ஆசியாவில் மிகப்பெரிய முருகன் சிலையாக இது இருக்கும்.