மகன் காதணி விழாவிற்கு 108 கிடாய்கள் வெட்டி விருந்து வைத்த சீமான்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடந்தது.

இதில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கான அழைப்பிதழை சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார் சீமான்.

“எனது மகன் காதணி விழாவிற்காகவும், குலதெய்வ வழிபாட்டிற்காகவும் இங்கு வந்தோம். 108 கிடாய்கள் வெட்டி விருந்து வைத்து விழா நடத்தி மகிழ்ச்சியோடு நிற்கிறேன்,” என்று காதணி விழாவின்போது செய்தியாளர்களிடம் சீமான் குறிப்பிட்டார்.

விழாவில் பிரபாகரன் கட்டுமானங்கள் நிறுவனர் பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!